Motorcyclists miraculous escape : ஒரு 20 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா இரு சக்கர வாகனத்தில் பயணத்தவரின் நிலை அவ்வளவு தான்.
மலேசியாவில், இரு சக்கர வாகனத்தை மழையில் ஓட்டி வரும் ஒரு நபர் நடு சாலையில் ஸ்கிப்பாகி கீழே விழுகிறார். எழுவதற்கு முன்பு அவரை நோக்கி வேகமாக ஒரு ட்ரக் லாரி வந்து கொண்டிருக்கிறது. பார்த்ததும் பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவை கண்டதும் அடுத்து அவருக்கு என்ன ஆகிருக்குமோ என்று நினைக்கையில் சட்டென்று அவர் எழுந்து விலகி விடுகிறார்.
இரண்டு நொடிகள் தான். கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அந்த நபருக்கு அன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்பதால் அவர் தப்பித்தார் என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.
சாலையின் ஓரமாக காரில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil