scorecardresearch

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்

விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பரபரப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ்தான் அது. அந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண அழைப்பிதழே இப்படியிருக்கையில், ஆகாஷ் அம்பானியின் திருமணம் எப்படியிருக்கும் என எல்லோரும் வாயை பிளந்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Move over virat anushka wedding mukesh ambani sons rs 1 5 lakh wedding card goes viral check out here