நட்பு எங்களின் தாரக மந்திரம்.. தந்தைகளை ஓவர் டெக் செய்த செல்ல மகள்கள்!

இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கிற லூட்டிகள் இணையத்தில் ஆல் டைம் வைரல் தான்.

இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கிற லூட்டிகள் இணையத்தில் ஆல் டைம் வைரல் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral photos ziva and gracia

viral photos ziva and gracia

viral photos ziva and gracia : நட்பில் தோனி மகள் ஜிவாவும், சுரேஷ் ரெய்னாவின் மகள் கிராஸியாவும் அவர்களின் தந்தைகளை ஓவர் டெக் செய்துள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு வெளியாகி இருக்கும் ஃபோட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியுடன் எல்லா வீரர்களுமே சகஜமாக பழகுவார்கள், அனைவருடனும் இயல்பாக பழகும் குணம் உடைய தோனிக்கு வாடா, போடா, அண்ணன், தலைவா என உரிமையுடன்  பேசும் அளவிற்கு எகப்பட்ட நண்பர்கள். அவரின் நட்பு வட்டாரம் கொஞ்சம் நீளம் தான்.

இதில் தோனியிடம் எல்லா நேரமும் ரொம்ப நெருக்கமாக இருப்பவர் யாரென்று பார்த்தால் அது சுரேஷ் ரெய்னா தான். இவர்கள் இருவரையும் ரசிகர்கள் தல தோனி, சின்ன தல ரெய்னா என்று ஆசையுடன் அழைப்பார்கள்.

இவர்களின் நட்பு மைதானத்தில் மட்டும் முடிந்துவிடுவதில்லை.அதையும் தாண்டி குடும்ப நண்பர்கள் வரை மிகவும் நெருக்கமானது. தோனி வீட்டில் எந்த விழாக்கள், கொண்டாட்டங்கள் நடந்தாலும் அங்கு முதலலில் நிற்பது தோனி குடும்பம் தான். இதே பழக்கம் தான் ரெய்னா வீட்டிலும். தோனியின் மனைவி சாக்‌ஷி, ரெய்னாவின் மனைவியும் நெருக்கமான தோழிகள்.

Advertisment
Advertisements

இந்த உறவு இப்போது அடுத்த தலைமுறைக்கும் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆமாம் தல, சின்ன தல-யின் செல்ல மகள்களான ஜிவா தோனி, கிராஸியா ரெய்னா இருவரும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கிற லூட்டிகள் இணையத்தில் ஆல் டைம் வைரல் தான்.

இணையத்தில் தோனி மகள் ஜிவாவும்- கிராஸியாவும் தான் கிங்க்ஸ். இவர்கள் இருவர் குறித்த எந்த ஒரு வீடியோவும், ஃபோட்டோ ரீலீஸ் ஆனாலும் உடனே வைரல் ஆவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் 2 சுட்டிகளும் நேற்று எடுத்துக் கொண்ட புகைப்படம் அல்டிமேட் கிளிக் ஆகிவிட்டது.

நட்பு என்னும் தாரக மந்திரத்தில் இருவரும் மாறி மாறி பாச மழையை பொழிந்துக் கொண்டுள்ளனர். நேற்று டெல்லியில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்விலஸ் அணியும், சென்னை அணியும் மோதிக்கண்டன. இந்த போட்டியை நேரில் காண ரெய்னா மனைவி மற்றும் மகள்,தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் ஜிவா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது கிராஸியா மற்றும் ஜிவா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இது.

 

View this post on Instagram

 

#Reunited @priyankacraina ❤️❤️❤️❤️❤️❤️❤️????????????

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: