Advertisment

மகளுக்கு டெஸ்ட் வைத்த தோனி.. கில்லி போல் அடிச்சி தூக்கிய ஜிவாவின் அடுத்த க்யூட் வீடியோ!

4 வயதில் ஜிவா இத்தனை மொழிகளை தெரிந்து வத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ziva Dhoni's viral video

Ziva Dhoni's viral video

Ziva Dhoni's viral video: எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கேன். யதர்த்தமாக சந்திக்கும் இருவருக்கும் இடையில் இந்த உரையாடல் நடத்தால் அது அவ்வளவு ஸ்பெஷலாக தெரியாது. ஆனால் தோனிக்கும் - அவரில் செல்ல மகள் ஜிவாவுக்கு இடையில் நடந்தால் கண்டிப்பாக ஸ்பெஷல் தானா?

Advertisment

தோனி தமிழ் பேசினாலே அது நம்மூர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். கூடவே அவருடன் சேர்ந்து ஜிவாவும் பேசினால் கேட்கவே வேண்டாம். இன்றைய தினம் ஊரே இந்த வீடியோவை பற்றித்தான் பேசிகிட்டு இருக்கு.

தோனியை விட சமூக தளங்களில் தனது மழலையான சேட்டைத்தனத்தால் ஒவ்வொரு முறையும் அதிகம் வைரல் ஆவது ஜிவா தான். இந்த முறையும் அப்படித்தான். வீடியோவில் இருப்பது என்னவோ அப்பா -மகள் இருவரும் தான். ஆனால் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்து இருப்பது எப்போதும் போல ஜிவா தான்.

ஜிவாவின் இந்த சுட்டித்தனம் மற்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் தான் அவரை ரசிகர்கள் ரசிக்க காரணமாக இருக்கிறது. ஜிவாவிற்கு இருக்கும் ஃபேன்ஸ் பட்டாளத்தை பார்த்து பாலிவுட் இயக்குனர்கள், ஜிவாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த போட்டி போட்டு வருகின்றனர். எப்போதுமே ஜிவா மீது தோனிக்கு ஒரு அபிரிமிதமான அன்பு தெரியும்.

இந்த முறை வெளியான வீடியோவிலும் அப்படித்தான். மகளுக்கு மொழி திறன் டெஸ்ட் வைக்கும் தோனி, ஜிவா அதில் ஜெயித்து விட்டார் என்று தெரிந்ததும் கைத்தட்டி சந்தோஷப்படுவது தந்தைக்கே உரிதான குணம் போல் காட்டுகிறது.

ஒருபக்கம் ஐபிஎல் தொடரில் தோனி பிஸியாக இருந்தாலும் தனது மகளுடன் நேரம் ஒதுக்குவதில் ரொம்ப தெளிவாக இருப்பார். அப்படித்தான் நேற்றைய தினம் மகள் ஜிவாவுக்கு மொழித்திறன் டெஸ்ட் வைத்தார். அதில் தோனி கேட்ட எல்லா கேள்விக்கு ஜிவா டக்கு டக்குனு சொன்ன பதில் பார்ப்பவரை ரசிக்க வைத்துள்ளது.

4 வயதில் ஜிவா இத்தனை மொழிகளை தெரிந்து வத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்.

Mahendra Singh Dhoni Ziva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment