Advertisment

43-வது பிறந்தநாளைக் கொண்டாடிய தோனி; கால்களைத் தொட்டு வணங்கிய மனைவி ஷாக்‌ஷி; வைரல் வீடியொ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி ஜூலை 7-ம் தேதி தனது 43-வது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடினார். அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் காலைத் தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhoni wife birthday

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி ஜூலை 7-ம் தேதி தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது மனைவி சாக்‌ஷி அருகே இருக்க தோனி பிறந்த நாள் கேக் வெட்டிய வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களி இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: MS Dhoni cuts his 43rd birthday cake, wife Sakshi touches his feet; video goes viral

இந்த வீடியோவில், மேசையில் பல விதமான கேக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் தோனி சாக்லேட் கேக்கை வெட்டுகிறார். முதல் கேக் துண்டை தோனி தனது மனைவி சாக்‌ஷிக்கு ஊட்டுகிறார். அருகே இருப்பவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது கேட்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தோனி மனைவி சாக்‌ஷி தோனியின் கால்களைத் தொட்டு வணங்குகிறார். அப்போது அறையில் ஒரு பெரிய சிரிப்பலை கேட்கிறது. ஜெயிலரில் வரும் ரஜினிகாந்தின் ஹூக்கும் பாடல் பின்னணியில் கேட்கிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள எக்ஸ் பயனர் @CricCrazyJohns குறிப்பிடுகையில்,  “எம்.எஸ். தோனி தனது 43வது பிறந்தநாளை சாக்‌ஷியுடன் கொண்டாடுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சுமார் 6 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல ரசிகர்கள் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ரசிகர், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர்.” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், “மனிதன், மேதை, தொன்மம், மகேந்திர சிங் தோனி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தோனிக்கு இன்று 43 வயதாகிறது. 4+3=7. ஒரு காரணத்திற்காக தல” மற்றொரு ரசிகர் தோனியின் ஜெர்சி எண்ணைக் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எக்ஸ் பக்கத்தில் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சல்மான் கான், “ஹேப்பி பர்த்டே கப்தான் சாஹப்!” என்று கூறி அவரது படத்தை பதிவிட்டார்.  நடிகர் சல்மான் கான் தனது பாந்த்ரா இல்லமான கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் விழாவை நடத்தினார்.

தோனி தனது குடும்பத்துடன் ஜார்கண்டின் ராஞ்சியில் வசிக்கிறார், தற்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருக்கிறார். அவர் சமீபத்தில் அம்பானியின் பிரமாண்ட சங்கீத் விழாவில் பங்கேற்றார், அதில் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சியும் இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment