பிராவோ பாட... ஜிவா ஆட...தோனியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா???

பிராவோ  சுழல் பந்திற்கு பதில் மைக்கை கையில் எடுத்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல ரெய்னாவின் மகள் கிராஸியா பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தோனி மகள் ஆடிய ஆட்டம்  வழக்கம் போல் வைரலாகி உள்ளது.

தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதை விட  ஜிவா தோனிக்கும், கிராஸியாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்.  சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு தனியாக ஃபேன்ஸ்  பேட்ச் கூட  இருக்கிறது.

அதிலையும் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனி பற்றி கேட்கவே வேண்டாம்.   ஜிவா பாடுவது, ஆடுவது, சமைப்பது, மொறைப்பது, அழுவது, பேசுவது என  என்ன செய்தாலும் அவ்வளவு க்யூட்டாக இருக்கும். உடனே, ரசிகர்கள் அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி விடுவார்கள்.

தனது தந்தைக்கு  சோஷியல் மீடியாவில் கடுமையாக  போட்டி கொடுப்பவர் ஜிவா தான். இந்நிலையில் தற்போது ஜிவாவின்  மற்றொரு வீடியோ  ஒன்று லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி, ரெய்னாவின் மகள் கிராஸியாவின் இரண்டாவது பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது.  இரவு நடந்த ப்ர்த்டே பார்ட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தோனி ஃபேமலி, ஹர்பஜன் சிங் ஃபேமலி,  ரெய்னாவின் நெருங்கிய நண்பர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இதில், பிராவோ  சுழல் பந்திற்கு பதில் மைக்கை கையில் எடுத்தார்.  அங்கிருந்த குட்டீஸ் பட்டாளங்களை எல்லோரையும் அழைத்து .’வி. ஆர் சாம்பியன்’ பாடலை பாடினார். அவரின் பாடலுக்கு   கிராஸியா, தோனி மகள் ஜிவா, ஹினயா ஹர்பஜன் ஆகியோர்  நடனம் ஆடி அனைவரையும்  ரசிக்க வைத்தனர்.

 

 

×Close
×Close