Advertisment

மகள் ஜிவாவுடன் செல்லப்பிராணி கோல்டன் ரெட்ரிவர் நாய்க்கு முடி வாரிவிடும் தல தோனி: வைரல் வீடியோ

கிரிக்கெட் மைதானத்தில் களம் இறங்கினால் சிக்ஸ், ஃபோர் என்று விளாசும் தோனி மகள் ஜிவாவுடன் தனது செல்லப்பிராணி கோல்டன் ரெட்ரிவர் நாய்க்கு முடி வாரிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Dhoni dog groom

எம்.எஸ். தோனியின் நாய்கள் மீதான அன்பு மறைக்கப்படவில்லை (Image source: @ChennaiIPL/X)

கிரிக்கெட் மைதானத்தில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மகேந்திர சிங் தோனி, நாய்கள் மீதான அன்பிற்காகவும் பாராட்டப்படுகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சமீபத்தில் தனது மகள் ஜிவா மற்றும் அவர்களின் செல்லப்பிராணி கோல்டன் ரெட்ரீவர் நாயுடன் இருக்கும் ஒரு அழகான தருணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து கொண்டு இணையத்தில் பலரின் இதயங்களை வென்றார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: MS Dhoni grooms his dog in an adorable video with daughter Ziva. Watch here

இந்த வீடியோவில், தோனி தனது செல்லப்பிராணி கோல்டன் ரெட்ரிவர் நாய்க்கு சீப்பில் முடியை வாரி விடுவதையும், ஜிவா கை கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்தில், குறும்புக்கார நாய், சீப்பை வாயால் பிடித்துக் கொள்கிறது. நாய் விட மறுத்ததால், ஜிவா அதை எடுக்க முயற்சிப்பது, வீடியோவின் அழகைக் கூட்டுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து,  ‘தெரபியூடிக்’ என்று தலைப்பிட்டுள்ளது.

Advertisment
Advertisement

இந்த வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோவை 2,18,000 க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். பல ரசிகர்கள் கருத்துப் பிரிவுக்கு வந்து தோனியின் அமைதியான நடத்தையைப் பாராட்டினர். ஒரு ரசிகர் எழுதினார்,  “தல தனது தலைமையின் கீழ் இந்திய வீரர்களை எப்படி வளர்த்தார் என்றால் இப்படித்தான்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர்,  “தனது உலகில் அவர் ஒரு லெண்ட்” என்று கருத்து தெரிவித்தார்.

“தோனி எப்போதும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. நாயை நடத்துவதில் மிகவும் கனிவானவர்” என்று மூன்றாவது பயனர் கூறினார்.

சமீபத்தில், தோனி சமூக ஊடகங்களில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், தனக்கு பி.ஆர்.ஓ தேவையில்லை என்று ஏன் நம்புகிறார் என்பதன் காரணமாகவும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

"நான் ஒருபோதும் சமூக ஊடகங்களின் பெரிய ரசிகனாக இருந்ததில்லை. பல ஆண்டுகளாக, எனக்கு பல மேலாளர்கள் இருந்தனர், அவர்கள் எப்போதும் என்னை இதில் ஈடுபட ஊக்குவிப்பார்கள். நான் 2004-ல் விளையாடத் தொடங்கினேன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டர் பிரபலமடைந்தது, அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பிரபலமடைந்தது. எனது அனைத்து மேலாளர்களும் என்னிடம், 'நீங்கள் கொஞ்சம் மக்கள் தொடர்பு செய்ய வேண்டும், உங்கள் இருப்பை உருவாக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால், எனது பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது: நீங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினால், உங்களுக்கு பி.ஆர். தேவையில்லை," என்று யூரோகிரிப் டிரெட் டாக்ஸில் தோனி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment