பெட்ரோல் விலையை கண்டித்து நடைப்பெற்ற பாரத் பந்தில் முன்னாள் கேப்டன் தோனி கலந்துக் கொண்டதாக வெளியான புகைப்படத்தின் உண்மை காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
பெட்ரோல் பங்கில் தோனி :
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக விஷத்தை விட வேகமாக ஏறிக்கொண்டிருப்பது பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. இது மத்தியிலும் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்தும், ஆளும் கட்சிக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கடந்த 10 ஆம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த பாரத் பந்தில் இந்திய கேப்டன் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி உடன் கலந்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இரவில் பெட்ரோல் பந்த் ஒன்றில் தோனி தனது மனைவி சாக்ஷிடம் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவியது.
இதனால் மத்திய அரசுக்கு எதிராக தோனி களமிறங்கிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் வைரலான புகைப்பாம் குறித்து உண்மை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. தோனி குடும்பத்துடன் பெட்ரோல் நிலையம் ஒன்றில் உட்கார்ந்திருந்த புகைப்படம், அவர் தனது குடும்பத்துடன் ஆகஸ்ட் மாதம் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் என்றும், பாரத் பந்த்தில் தோனி கலந்து கொண்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் தோனி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்பின்னரே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.