Advertisment

நீ வேற லெவல் தலைவா... ரசிகர்களை மதிக்கும் தோனி.இதை விட என்ன வேணும்!

இது போதாதா? அவரை தூக்கி வைத்து கொண்டாடா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhoni fans selfie

dhoni fans selfie

dhoni fans selfie : தல தோனி.. இந்த பெயர் கேட்டவுடன் ஆர்பரிக்கும் ரசிகர் கைதட்டல் மற்றும் விசில் சத்தத்திற்கு ஒரு எண்டு காடே இல்லை. அனுமதி மறுக்கப்படும் போதும் எப்படியாவது தோனியை பார்த்து விட வேண்டும், நாங்கள் உங்களின் தீவிர ரசிகன் என்று சொல்லி விட வேண்டும்.மைதானத்திற்கு புகுந்து அவரை தொட்டு விட்டு ஓடி வர வேண்டும் இப்படி தோனி ரசிகர்கள் செய்த செயல்களை பட்டியலிட்டால் லிஸ்டு போதாது.

Advertisment

தன் மீது இப்படி அளவுக்கடந்த அன்பும், வெறித்தனமாக இருக்கும் ரசிகர்களை கண்டு தோனி பலமுறை வியந்து அதை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். அதிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி ஆடும் போது மொத்த சென்னையும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். இது கிரிக்கெட் மீது அவர்கள் கொண்டுள்ள காதலா அல்லது தோனி மீதமுள்ள ஈர்ப்பா என்றால் பிரித்து பார்க்க முடியாது.

அப்படி தான் மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சொன்னால் நம்ப மாட்டீங்க, 70 வயது மதிக்க மூதாட்டி தோனியின் அதிதீவிரமான ரசிகை. தோனியை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மும்பை வான்கடா மைதானத்தில் நேற்று முன்தினம் மும்பை மற்றும் சென்னை அணிகள் இடையே நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை காண தனது பேத்தியை அழைத்து சென்றார்.

போட்டி முடிந்தவுடன் தோனியுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லை “நான் இங்கு வந்திருப்பது தோனிக்காக மட்டுமே”என்ற வாசகம் எழுதிய சார்ட் ஒன்றையும் கையில் வைத்திருந்தார்.

இந்த தகவல் ட்ரெஸிங் ரூமில் இருந்த தோனியின் காதுக்கு செல்ல, உடனே புறப்பட்டு வந்தார் தோனி. அந்த மூதாட்டியிடம் சென்று அவர் ஆசைப்பட்டது போல் செல்பியும் எடுத்துக் கொண்டார். அத்துடன் அவர் தோனியின் ரசிகையாக ஏன் மாறினார் என்பதை தல தோனியிடன் விளக்க சிரித்தப்படியே கேட்டார் மிஸ்டார் கூல் .

இது போதாதா? அவரை தூக்கி வைத்து கொண்டாடா? ரசிகர்களை ரசிக்கும் தலைவா.. இதுதான் தோனி ஃபேன்ஸின் ஆன்தம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment