Advertisment

‘ஒரு சகாப்தத்தின் முடிவு’: ஐ.பி.எல் 2024-க்கு முன் சி.எஸ்.கே கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி; ரசிகர்கள் ரியாக்ஷன்ஸ்

ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்குவதற்கு முன், சி.எஸ்.கே கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dhoni

ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்குவதற்கு முன், சி.எஸ்.கே கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி விலகியுள்ளார். photo: x

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்.எஸ் தோனி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் சி.எ.ஸ்கே அணி 5 முறை ஐ.பி.எல் கோப்பையைப் பெற கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். எம்.ஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் ஒப்படைத்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘End of an era’: Fans react as MS Dhoni steps down as CSK’s captain ahead of IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2024 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி வியாழக்கிழமை விலகினார். ஐ.பி.எல் அணியின் புதிய கேப்டனாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக சி.எஸ்.கே-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் எக்ஸ் பதிவைப் பாருங்கள்:

கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் இந்த அறிவிப்புக்கு விரைவாக பதிலளித்தனர், இது 'ஒரு சகாப்தத்தின் முடிவு' என்று அழைத்தனர். ரசிகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,  “கடைசியாக அவர் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால்.” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர்,  “சி.எஸ்.கே கேப்டனாக தோனிக்கு ஒரு சகாப்தம்! விளையாட்டின் மேதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.பி.எல்-க்கு ஒரு நாள் முன்னதாக இதை ஏன் அறிவிக்க வேண்டும், @msdhoni?? நீங்கள் மீண்டும் சி.எஸ்.கே-வை வழிநடத்துவதைப் பார்ப்பதற்காக ஆண்டு முழுவதும் காத்திருந்த ரசிகர்களுக்கு இது அநியாயம் இல்லையா” என்று உணர்ச்சிவசப்பட்ட ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.  “இந்த ஐ.பி.எல்-ல் எம்.எஸ் தோனி கேப்டன் அல்ல. இந்த ஐ.பி.எல் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் இல்லை. விராட் கோலி இனி கேப்டன் இல்லை. இந்த ஐ.பி.எல் நம்மில் பலருக்கு வித்தியாசமானது,” என்று மற்றொரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார்.

சி.எஸ்.கே மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது, “டாடா ஐ.பி.எல் 2024 தொடங்குவதற்கு முன்னதாக எம்.எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார். ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து ஐ.பி.எல் போட்டிகளில்  52 போட்டிகளில் விளையாடியுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், “சி.எஸ்.கே அணி வரவிருக்கும் சீசனை எதிர்நோக்குகிறது” என்று கூறியுள்ளது. எம்.எஸ். தோனி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சி.எஸ்.கே அணியை 5 ஐந்து ஐ.பி.எல் பட்டங்களை வெல்ல கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். மேலும், 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சி.எஸ்.கே-வை இரண்டு சி.எல்.டி 20 பட்டங்களுக்கு வழிநடத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment