தாடி நரைத்த தோனி வீடியோ; நெட்டிசன்கள் மீம்ஸ் மழை

தோனி தனது மகளுடன் விளையாடும் ஒரு புதிய வீடியோவை அவரது மகள் ஜிவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நரைந்த தாடியுடன் தோனி திடீரென்று வயதான தோற்றத்தில் காணப்படுவதைப் பற்றி நெட்டிசன்கள் நிறைய மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

By: May 9, 2020, 10:59:20 PM

எம்.எஸ். தோனி கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் பெரும்பாலும் மக்கள் பார்வையில் இருந்து விலகியே இருந்தார். கடைசியாக அவர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னையில் பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது பார்வைக்கு வந்தார். அதற்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டனான தோனி தனது மகள் ஜிவாவுடன் விளையாடும் ஒரு புதிய வீடியோவை அவரது மகள் ஜிவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நரைந்த தாடியுடன் தோனி திடீரென்று வயதான தோற்றத்தில் காணப்படுவதைப் பற்றி நெட்டிசன்கள் நிறைய மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன் மகேந்திரசிங் தோனிக்கு இப்போது 38 வயதாகிறது. தற்போது தோனி தனது ராஞ்சி வீட்டில் தனது குடும்பத்தினர் மற்றும் நாய்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான தோனி சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும், ரசிகர்கள் அவரது மகளின் இன்ஸ்டாகிராமில் அவரைப் பார்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#runninglife post sunset !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on


சமீபத்திய வீடியோவில், தோனி அவரது மகள் ஜிவா இருவரும் புல்வெளியில் தங்கள் நாயுடன் விளையாடுவதையும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த வீடியொவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது என்னவோ தோனியின் நரைத்த தாடியுடன் வயதானது போன்ற அவரது தோற்றம்தான்.

தோனியின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், பொது முடக்கத்தால் சலூன்களுக்கு செல்ல முடியாததால் இப்படித்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். சிலர், உங்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரருக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள இந்த 45 நாட்கள் பொது முடக்கத்தில் தோனிக்கு இவ்வளவு வயதாகிவிட்டதா என்று கேட்டு, அவருடைய இளமையான புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்தி மீம்ஸ் மழையாக பெய்துள்ளனர்.


நெட்டிசன்கள் சிலர் தோனியின் இளமையான புகைப்படத்தை பதிவிட்டு நீங்கள் சிஏ படிக்கத் தொடங்கியபோது… என்று தற்போதைய புகைப்படத்தைக் குறிப்பிட்டு நீங்கள் சிஏ-வான போது என்று மீம்ஸ் செய்துள்ளனர்.


அதே போல, மருத்துவக் கல்லூரியில் படிக்க நுழைந்தபோது, எம்.பி.பி.எஸ் எம்.டி, எஃப்.ஆர்.சி.எஸ் படித்து முடித்தபிறகு என்று மீம்ஸ் செய்துள்ளனர்

மற்றொரு மீம்ஸில், தோனியின் இளமை தோற்றம் லாக்டவுனுக்கு முன்பு வயதான தோற்றம் 45 நாள் கோவிட்-19 லாக்டவுனுக்குப் பிறகு என்று என்று பதிவிட்டுள்ளனர்.

தோனியின் தோற்றத்தை வைத்து வெளியான மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ms dhoni with grey beards viral video netizens shares memes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X