வைரல் புகைப்படம்: கலர்ஃபுல்லாக காட்சி தரும் தோனியின் மனைவி மற்றும் மகள்

தோனி - சாக்‌ஷி தம்பதியரின் மகள் ஜிவா. இரண்டு வயதாயேனாலும் தன் தந்தைக்கு ஒத்த புகழுடன் இணையத்தளத்தில் இளவரசியாக வலம் வருபவர் ஜிவா தோனி.

By: Updated: January 11, 2018, 04:49:17 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தோனி – சாக்‌ஷி தம்பதியரின் மகள் ஜிவா. இரண்டு வயதாயேனாலும் தன் தந்தைக்கு ஒத்த புகழுடன் இணையத்தளத்தில் இளவரசியாக வலம் வருபவர் ஜிவா தோனி.

ஏற்கனவே அத்வைதம் எனும் படத்தில் வரும் ‘அம்பலப்புழா உன்னிக் கண்ணனோடு’ பாடலை உச்சரிப்பு சுத்தத்துடன் பாடியோ இன்ஸ்டகிராமில் வெளியாகியது. இதனால், ஜிவாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகினர். iதனால், வரும் ஜனவரி 14-ம் தேதி அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 12 களபம் திருவிழாவின்போது, ஜிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்க திருவாங்கூர் சமஸ்தானம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 1964-ஆம் ஆண்டு வெளியான ஓமனக்குட்டன் எனும் திரைப்படத்தில் வெளியாகும் ’கனிகாணும் நேரம்’ பாடலை தன் மழலை மொழியில் பாடி அசத்தினார் ஜிவா.

இப்போது, தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா இருவரும் உள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ms dhonis daughter zivas cute photo goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X