பயமுறுத்தும் வகையில் இப்படி தானாக துள்ளி எழும் சகதியை பார்த்தது உண்டா?
எரிமலை வெடித்துச் சிதறுவதைப் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஆனால், சகதி தானாக மேலே எழுந்து எரிமலை போல வெடித்து சிதறுவதை பார்த்திருக்கிறீர்களா? அப்படி சகதி எரிமலையாக வெடித்து சிதறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
mud volcano rising video, mud volcano, volcano bursting video, எரிமலை வெடிப்பு, எரிமலை, சகதி வெடிப்பு, சகதி வெடிப்பு வைரல் வீடியோ, தமிழ் வீடியோ, mud volcano rising viral video, mud volcano viral video, virl video, tamil viral video, tamil video, twitter viral video, tamil trending video viral
எரிமலை வெடித்துச் சிதறுவதைப் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஆனால், சகதி தானாக மேலே எழுந்து எரிமலை போல வெடித்து சிதறுவதை பார்த்திருக்கிறீர்களா? அப்படி சகதி எரிமலையாக வெடித்து சிதறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
பொதுவாக எரிமலைகள்தான் வெடித்து சிதறும். எரிமலை வெடிக்கும்போது சாம்பல் தூசுகள் எரிமலை குழம்புகள் லாவாக்கள் உருகி ஓடும். இதனை பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஜாவா, சுமத்ரா தீவுகளில் இந்த எரிமலை வெடிப்புகள் நடப்பது வாடிக்கை.
இதே போன்று சகதி எரிமலை குழம்பு போல மேலே எழுந்து வெடித்துச் சிதறுவதும் உண்டு. ஆனால், எரிமலை வெடிப்பை போல இந்த சகதி வெடிப்பால் பெரிய ஆபத்து ஏதும் இல்லை. அதிக வெப்பநிலையில் சூடாக இருக்கும் சகதி வாயுக்களின் வெளியேற்றத்தால் திடீரென மேலே எழுது வெடித்து சிதறும். இதுபோன்று இந்தியாவில் நடப்பதாக கூறப்படுகிறது. அப்படி, சகதி மேலே எழுந்து வெடித்து சிதறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் ஐ.எஃப்.எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இது இந்தியாவில் எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
This is called as Mud #volcano. Do you know we in India also have active mud volcano. Can you name where ? Read. pic.twitter.com/aLf3R1vM9w
சகதி திடீரென மேலே எழும் வீடியோவைப் பற்றி பிரவீன் கஸ்வான், “இது சகதி எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவிலும் சகதி எரிமலை வெடிப்புகள் நடக்கின்றன. இந்தியாவில் எந்தப் பகுதி என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பெரும்பாலும் இதுவரை எரிமலை வெடிப்பு வீடியோக்களை மட்டுமே பாத்துள்ள நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து வியப்படைந்து பரப்பிவருகின்றனர். மேலும், இது போல, இந்தியாவில் பரதாங் தீவிலும் மற்றும் பாரென் பகுதியில் நடப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.