இது “ரெட்டை பிறவி” பாஸ்… 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் சுஜய், விஜய் இரட்டையர்கள்

சேரம்பாடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் மற்றும் பழங்குடிப் பெண் ஒருவரை கொன்ற ஷங்கர் யானையை பிடிக்க தான் முதன்முறையாக இவ்விரண்டு யானைகளையும் ஒன்றாக களத்தில் இறக்கினார்கள் வனத்துறையினர்.

Mudumalai elephant twin brothers Vijay Sujai celebrate 50th birth anniversary

யானைகள் வெகு அரிதாகவே இரண்டு யானைகளை ஈனும். நீலகிரியில் உள்ள முதுமலையில் தேவகி என்ற பெண் யானைக்கு 1971ம் ஆண்டு, மே மாதம் 20ம் தேதி அன்று 30 நிமிட இடைவெளியில் இரண்டு ஆண் யானைகள் பிறந்தன. சுஜய் யானை பிறந்த 30 நிமிடங்கள் கழித்து விஜய் யானை பிறந்தது. இரண்டு யானைகளுக்கும் கும்கி பயிற்சிகள் முதுமலை யானைகள் முகாமில் வழங்கப்பட்டன. எப்போதும் இந்த யானைகள் ஒரே இடத்தில் தான் வைத்து பராமரிக்கப்படும். தெப்பாக்காடு யானைகள் முகாமிலும் கூட 500 மீட்டர் இடைவெளியில் தான் இரண்டு யானைகளும் வைக்கப்படும்.

மேலும் படிக்க : 70 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையில் தட்டுப்படும் நீருக்குள் மூழ்கிய கிராமம்… வைரலாகும் புகைப்படங்கள்

காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டி அனுப்ப மற்றும் தேவை ஏற்படும் போது யானைகளை பிடித்து முகாம்களுக்கு அனுப்ப இவ்விரண்டு யானைகளும் பெரிய அளாவில் கோவை மாவட்டம் சாடிவயல் மற்றும் இதர பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. 2018ம் ஆண்டு முகாமில் காட்டு யானை ஒன்றுடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் சுஜய் தன்னுடைய தந்தத்தை இழந்தது. எப்போதும் இந்த இரட்டையர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்த நிலையில் ஒற்றை தந்தம் கொண்ட யானை சுஜய் என்பது அடையாளமாக மாறியது. என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் கூட இருவரையும் ஒரே பணிக்கு அழைத்து செல்வதில்லை வனத்துறையினர்.

டிசம்பர் மாதம் கூடலூர் வட்டம், சேரம்பாடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் மற்றும் பழங்குடிப் பெண் ஒருவரை கொன்ற ஷங்கர் யானையை பிடிக்க தான் முதன்முறையாக இவ்விரண்டு யானைகளையும் ஒன்றாக களத்தில் இறக்கினார்கள் வனத்துறையினர். எது எப்படியோ, இவர்கள் மேலும் பல ஆண்டுகள் நலமாக வாழ வாழ்த்துவோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mudumalai elephant twin brothers vijay sujai celebrate 50th birth anniversary

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com