வைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்!

கிளப், டிஸ்கோ, உணவகம், திருமண மண்டபம் என எல்லா இடங்களிலும் இப்பாடல் ஒலித்தது.

By: Updated: December 5, 2019, 08:08:42 PM

Mukkala Muqabla: 1994 ஆம் ஆண்டு வெளியான ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த  ”முக்கலா முக்காபலா” பாடல் இன்று வரை எல்லோருக்கும் பிடித்த பிரபலமான பாடலாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், பிரபுதேவாவின் நடன அசைவுகளில் எப்போது இப்பாடலை பார்த்தாலும் புத்துணர்வு கேரண்டி. படம் வெளியான சமயத்தில் கிளப், டிஸ்கோ, உணவகம், திருமண மண்டபம் என எல்லா இடங்களிலும் இப்பாடல் ஒலித்தது. அதோடு இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, அங்கும்  பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், கேரள இசைக்குழுவால் ’செண்டை’யில் ’முக்காலா முக்காபலா’ பாடல் இசைக்கப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடகி ஸ்வேதா மோகன் அந்த வீடியோவை வெளியிட்டு, ”சில பாடல்கள் என்றும் பசுமையானவை. அதை 1000 தடவைகள் கேட்டிருந்தாலும் கூட சலிக்காமல், மீண்டும் கேட்கத் தோன்றும். செண்டை மேளத்தில் முக்காலா முக்காபலாவின் சுவாரஸ்யமான பதிப்பு.. நிச்சயமாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் இதைப் பார்க்கும்போது மகிழ்வார்!!” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

70,000 பார்வைகளுக்கு மேல் பார்த்த இந்த வீடியோ கமெண்டுகளால் நிரம்பியுள்ளது. பலர் பெர்ஃபார்மென்ஸை பாராட்டியபோது, மற்றவர்கள் “நீல நிறத்தில் மகிழ்ச்சியான அங்கிள்” என பாடலுக்கு நடனமாடியவரை குறிப்பிட்டனர். இப்பாடல் வீடியோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

Web Title:Mukkala muqabla kerala chendai melam ar rahman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X