மும்பையில் புதன்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, மக்கள் கடுமையான வெள்ளத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவித்தனர். ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால், பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக மழை வெள்ள நீரில் வனவிலங்குகளும் வந்து அச்சத்தை அதிகப்படுத்தியது. ஆரே காலனி காட்டில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து மும்பையின் தெருக்களில் செல்வதை இணையத்தில் பரவும் வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோவை ரஞ்ஜீத் ஷமல் பாஜிராவ் ஜாதவ் (@ranjeetnature) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார், அதில் “6 அடி நீள இந்திய மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை இரவு ஆரே காட்டில் ஒரு சாலையைக் கடப்பதை காட்டுகிறது. ஆரே காடு வளமான பல்லுயிர் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.”
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
A 6-foot Indian Rock Python was seen crossing a road in Aarey Forest on Tuesday night. A reminder of Aarey’s rich biodiversity and the need to protect wildlife corridors. #Aarey #Wildlife #Mumbai #conservation #aareyforest #indianrockpython
— Ranjeet Shamal Bajirao Jadhav (@ranjeetnature) September 25, 2024
Video Credit @athaniya_vasim… pic.twitter.com/d91NXgd13U
இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆரே காடு அருகே சாலையைச் சுற்றி இரவில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஒரு பயனர் எழுதினார், “ஆரே சாலை இரவில் போக்குவரத்துக்கு மூடப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் - காலை 10.30-11.00 முதல் காலை 5.30 மணி வரை சாலையை மூட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் எழுதினார், “பகிர்வதற்கு நன்றி. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வாகனப் போக்குவரத்திற்கு ஆரேயை மூடுவது சிறந்த முதல் நடவடிக்கையாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில், உடும்பு ஒன்று குடியிருப்பு வளாகத்தில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். உடும்பின் பயங்கரமான நாக்கையும் வீடியோ படம்பிடித்தது. “அவர்கள் கோரேகான் ஈஸ்ட் ஹவுசிங் சொசைட்டியில் ஒரு உடும்பைக் கண்டார்கள். உடும்பின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உள்ளது” என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்/டி) அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான மழை பெய்யும் என்று ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.