ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு துணிதுவைக்கும் சோப்பை அளித்த ஃப்ளிகார்ட்!

ஃபோனிற்காக ஆவலாக காத்திருந்த அவருக்கு, டெலிவரி செய்யப்பட்டது 2 துணி வைக்கும் சோப்புகள்.

ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிகார்டில், ஐஃபோன் ஆர்டர் செய்தவற்கு துணி துவைக்கும் சோப்பு டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக செயல்பட்டு வரும் தொழில்நுட்ப உலகில், அன்றாட வாழ்வில் தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் மேலோங்கி வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளங்கள், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றன. டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சரியாகவும், தரமானதாகவும் வந்து சேர்கின்றனவா? என்ற கேள்விக்கு சில நேரங்களில் விடை கிடைப்பதில்லை.

அந்த வகையில், மும்பை மாநகரில் ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்வதற்கு, துணி துவைக்கும் சோப்பு டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தப்ராஜ் மெஹபூப் நெஹ்ராலி என்பவர், ஃப்ளிப்கார்டில் ஐஃபோன் 8 ஸ்மார்ஃபோனை புக் செய்து வாங்கியுள்ளார். இதற்கான 55,000 ரூபாய் பணத்தையும் அவர் ஆன்லைன் வழியாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஃபோனிற்காக ஆவலாக காத்திருந்த அவருக்கு, டெலிவரி செய்யப்பட்டது 2 துணி வைக்கும் சோப்புகள். டெலிவரி பாக்ஸில் சோப்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கஸ்டமர் கேர் நம்பருக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் அளித்த புகாரின் மீது ஃப்ளிப்கார்ட் நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர் செலுத்திய 55 ரூபாய் பணத்தை திருப்பி தரவில்லை என்று தப்ராஜ் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதுனுடன், ஃப்ளிஃப்கார்டில் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் அந்த நபர், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இணையவாசிகள் பலரும், ஃப்ளிப்கார்டிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில், இது குறித்து பதில் அளித்துள்ள அந்நிறுவனம் விரைவில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

×Close
×Close