மும்பையை உலுக்கிய கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள்; உணவு விநியோகம் செய்த சொமேட்டோ ஊழியர்!

Mumbai rain: வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

Mumbai rain: வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Mumbai rain waterlogging videos

Mumbai rain: மும்பை காவல்துறை குழு முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று, ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதை இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. Photograph: (Image Source: X)

Mumbai rain: வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

இடைவிடாத கனமழையால் மும்பையின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, சண்டாக்ரூஸ் பகுதியில் 99 மி.மீக்கும் அதிகமாகவும், கோலாபா கடலோரப் பகுதியில் 38 மி.மீ மழையும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை காலைக்கு இடையில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 19 வரை மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையைச் சமாளிக்கும் மக்களின் காணொலிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

அவற்றில் ஒரு காணொலி, கிங்ஸ் சர்க்கிள், காந்தி மார்க்கெட் அருகே வெள்ளத்தில் சிக்கியிருந்த பள்ளி வாகனத்தில் இருந்து, பள்ளி குழந்தைகளை மீட்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றும் காட்சிகளைக் காட்டுகிறது. முழங்கால் அளவு தண்ணீரில் மும்பை காவல்துறையினர் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது அந்த காணொலியில் பதிவாகியுள்ளது.

Advertisment
Advertisements

இந்தக் காணொலியை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒருவர், "கிங்ஸ் சர்க்கிள், காந்தி மார்க்கெட் அருகே பள்ளி வாகனங்களில் சிக்கியிருந்த பள்ளி குழந்தைகள், மும்பை போலீஸ் ஊழியர்களால் மீட்கப்பட்டு, மாதுங்கா காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த காணொலிக்குக் கருத்து தெரிவித்த பலரும், "முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், பள்ளிக்கு விடுமுறை விடாமல் ஏன் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்," என்றும், "பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மாநகராட்சிதான் பொறுப்பு" என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

மற்றொரு புகைப்படம், கனமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு சொமேட்டோ (Zomato) ஊழியரைக் காட்டுகிறது. அந்த ஊழியரைப் பாராட்டி ஒரு பயனர், "மும்பையில் கனமழை, எங்கும் வெள்ளம். இந்த நிலையிலும் ஒரு சொமேட்டோ ஊழியர் உணவை விநியோகிக்க நடந்து செல்கிறார். இவரின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது, இவரைப் போன்றவர்களால் இன்று யாராவது பசியுடன் தூங்க மாட்டார்கள். இந்த விநியோக வீரர்களுக்கு என் சல்யூட்" என்று பதிவிட்டிருந்தார்.

"வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அரபிக்கடல் வரை பரவியுள்ள கிழக்கு-மேற்கு திசை காற்று, மகாராஷ்டிராவின் கொங்கன் கடற்கரையில் கடும் மழையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரத்தின் நடுப்பகுதி வரை மழை தொடரும், அதன் காரணமாகவே மும்பைக்கு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன" என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: