மும்பையில் கேப் விடாமல் கொட்டித் தீர்த்த மழை: கனமழையிலும் குறையாத உற்சாகம்! எக்ஸ் தளத்தை கலக்கிய வைரல் வீடியோக்கள்!

மழை வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் இளைஞர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடுவது, படகுகளில் பயணிப்பது, மற்றும் பலரும் மகிழ்ச்சியுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

மழை வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் இளைஞர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடுவது, படகுகளில் பயணிப்பது, மற்றும் பலரும் மகிழ்ச்சியுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

author-image
Meenakshi Sundaram S
New Update
Mumbai rain 5

மும்பையில் கேப் விடாமல் கொட்டித் தீர்த்த மழை: கனமழையிலும் குறையாத உற்சாகம்! எக்ஸ் தளத்தை கலக்கிய வைரல் வீடியோக்கள்!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. 

Advertisment

munmbai rain

தொடர்ந்து கனமழை பெய்வதாலும், தண்ணீர் தேக்கம் இருப்பதாலும், அவசியம் இருந்தால் மட்டும் பயணிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மும்பைவாசிகளுக்கு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Mumbai rain 3

Advertisment
Advertisements

இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. அதிகளவாக விர்க்ஹோலியில் திங்கட்கிழமை மட்டும் 139.5 மிமீ மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Mumbai rain 2

மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாத மழை எதிரொலியாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மும்பை விமான நிலைய ஓடுபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விமானங்கள் தரை இறங்கவோ, புறப்படவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மழையையும் கொண்டாடும் வகையில் சிலர் உற்சாகமாக ஆட்டம்போட்டு மகிழ்வதையும் காண முடிகிறது. அவர்களின் உற்சாகம், வெள்ளம் தேங்கிய தெருக்களில் நடனமாடும் வீடியோக்கள், கிரிக்கெட் விளையாடும் காட்சிகள், மற்றும் மழைநீரில் மிதக்கும் படகுகளில் பயணிக்கும் வீடியோக்கள் என பல வடிவங்களில் வெளிப்பட்டன.

மற்றொரு வீடியோவில், ஒரு பெரியவர் மழைநீரில் படகு ஒன்றை செலுத்தி, அதன் மூலம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் பயணித்தார். இந்த காட்சி, பலருக்கும் சிரமமாகத் தோன்றிய சூழ்நிலையை, எப்படி வாய்ப்பாக மாற்றலாம் என்பதைக் காட்டியது.

இவை தவிர, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலரும், மழையில் பாட்டுப் பாடி, நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, கனமழையும் அவர்களின் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை காட்டியது. 

Mumbai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: