கொடுமைப்படுத்தும் கணவனிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்: ட்விட்டரில் கதறும் பெண்!

இந்த வீடியோ பதிவிட்ட சில நேரங்களில் இணையத்தில் வைரலானது.

மும்பையில் பெண் ஒருவர், தனது கணவர் தன்னை பல வருடங்களாக கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறும் ட்விட்டரில் அழுதப்படி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மும்பை, அடுக்காடி குடியிருப்பில் வாழ்ந்த வரும் பெண், தனது கணவனால் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு போலீசார் உதவுமாறும் இயக்குனர் அசோக் பண்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர், அழுதப்படியே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், போலீசார் தன்னை காப்பாற்றும்படி கதறுகிறார். வீடியோவில் அந்த பெண் கூறியதாவது, “என் கணவர் குர்ப்ரீத் சிங், பல வருடங்களாக என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு வகையில் டார்சர் செய்து வருகிறார். குடிபழக்கம், சூதாட்டம் என தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும் அவர், தினமும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். என் குழந்தைகளுக்காக இத்தனை வருடங்களாக இந்த கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வந்தேன்” என்று கூறுகிறார்.

அதனுடன், மும்பையில் தொழிலதிபராக இருக்கும் தனது கணவருக்கு காவல் துறை அதிகளவில் உதவி செய்கிறது என்றும் பலமுறை அவர் குறித்து காவல் துறையில் புகார் அளித்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். தனது கணவர் குர்ப்ரீத் சிங், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி என்னுடைய பெயரில் இருந்த வீட்டையும் தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார். என்னை கொலை செய்யவும் பலமுறை முயற்சித்துள்ளார். அதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. அதற்குள் என்னை எப்படியாவது, தனது கணவனிடம் இருந்து காப்பாற்றும் படி கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சில நேரங்களில் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

×Close
×Close