‘மம்மி திட்டுவாங்க விடு...’ டி-சர்ட்டை கடித்து இழுத்த புலியிடம் கெஞ்சிய சிறுவன்: வைரல் வீடியோ

‘மம்மி திட்டுவாங்க விடு’ என விலங்கியல் பூங்காவில் புலி தனது டி-சர்ட்டைப் பிடித்து இழுத்தபோது சிறுவனின் வேடிக்கையான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
White Tiger grab t shirt of child

வெள்ளை புலி தனது வாயில் குழந்தையின் டி-சர்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி

விலங்கியல் பூங்காவில் கூண்டுக்குள் இருக்கும் வெள்ளை புலி தனது வாயில் குழந்தையின் டி-சர்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ‘மம்மி திட்டுவாங்க விடு...’  என்று குழந்தை வேண்டுகோள் விடுத்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Mummy daantegi’: Little boy’s hilarious plea as tiger grabs his t-shirt at zoo goes viral

இந்தியாவில் ஏதாவது தவறு நடந்தால் ஒரு குழந்தையின் மனதில் முதலில் தோன்றும் விஷயம், 'அம்மா எப்படி நடந்துகொள்வார்கள்?' என்பதுதான். அந்த உணர்வு உடனடியாக அவர்களின் தாய்மார்களையும் அவர்களின் கண்டிப்பு அல்லது திட்டுதலையும் நினைவூட்டுகிறது. ஒரு விலன்கியல் பூங்காவில் ஒரு சிறுவன் புலியைச் சந்தித்தபோது அவருக்கு நடந்ததைப் போன்ற ஒரு வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், வெள்ளைப் புலி அதன் வாயில் குழந்தையின் டி-சர்ட்டைப் பிடித்து இழுப்பது காட்டப்பட்டுள்ளது. ‘சோர் தே, ப்ளீஸ், மேரி மம்மி மேரா சக்னாச்சுர் கர் தேகி (தயவுசெய்து என்னை விட்டுவிடு, என் டி-சர்ட் கிழிந்திருப்பதைப் பார்த்தால் என் அம்மா என்னை அடிப்பார்),’ என்று சிறுவன் புலியிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறான். தன்னை விடுவிக்கத் தவறிய பிறகு, சிறுவன் வெள்ளைப் புலியை அடக்க முயற்சிக்கிறான், “சோர் தே ப்ளீஸ், அம்மா டேட்டங்கி (தயவுசெய்து என்னை விட்டுவிடு, என் அம்மா என்னைக் கத்துவாள்)” என்று பணிவுடன் கூறுகிறான்.

Advertisment
Advertisements

இந்த சம்பவம் நடந்த இடம், தேதி தெரியவில்லை. வீடியோவைப் பகிர்ந்துகொண்ட, @gharkekalesh என்ற எக்ஸ் பக்கத்தில்,  “விலங்கியல் பூங்காவில் புலி தனது சட்டையைப் பிடித்த பிறகு, குழந்தை "மேரி சட்டை சோட் தே, மம்மி டான்டேகி" என்று கத்தத் தொடங்குகிறது" என்று எழுதியுள்ளார்.

இங்கே வீடியோவைப் பாருங்கள்:

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ, பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது. “இந்தக் குழந்தையின் எதிர்வினை முற்றிலும் விலைமதிப்பற்றது! ஒரு புலி தனது சட்டையைப் பிடித்தாலும், அவனது முதல் எண்ணம், “மேரி சட்டை சோட் தே, மம்மி டான்டேகி” என்பதாகும். குழந்தைகள் தங்கள் சொந்த நகைச்சுவையான முறையில் எவ்வாறு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு” என்று ஒரு பயனர் எழுதினார். “அவன் புலியை விட அம்மாவைப் பார்த்து பயப்படுகிறான்,” என்று மற்றொரு பயனர் பதிலளித்தார்.

"ஹாஹா, அந்தக் குழந்தை புலியை விட அம்மாவின் திட்டுதலைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறான்" என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார். "அந்தக் குழந்தை தனது முன்னுரிமைகளை சரியாக வைத்திருக்கிறான்!!" என்று மற்றொரு பயனர் கூறினார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: