வல்லவனுக்கு தர்பூசணி பழத்துண்டுகளும் இசைக்கருவி தான் – வைரல் வீடியோ

Trending video : இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை மக்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By: September 4, 2020, 4:46:43 PM

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது பழமொழி. இதை மெய்ப்பிக்கும் வகையில், இசைக்கலைஞர், தர்பூசணி, கிவி பழத்துண்டுகளை வைத்து இசையமைத்து வரும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3 நிமிடம் காலஅளவிலான இந்த வீடியோவில் பியானோ கீகளாக தர்பூசணி மற்றும் கிவி பழத்துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரம்ஸ்கள், கால்கள் மூலம் இசைக்கப்படுகின்றன.

இந்த பழத்துண்டுகளுக்கு ஏற்றவகையில், வாட்டர்மெலான் என்ற பாடலை, நீச்சல்குளக்கரையில் அமர்ந்தவாறு வாசிக்கும் இசைக்கலைஞர், இறுதியில், அந்த பழத்துண்டுகளை சுவைக்கிறார்.

இந்த பழத்துண்டுகள், கீபோர்ட் நோட்ஸ்களை ப்ரி டியுன்களாக சிந்தசைஸ் பண்ணியுள்ளன. பழத்துண்டுகளை தொடும்போது, அது கம்பியூட்டர் அல்லது மொபைல் போனில் பாடலாக ஒலிக்கின்றன.

சர்க்கியூட் போர்டு, அல்லிகேட்டர் கிளிப்ஸ், யுஎஸ்பி கேபிள்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாகே மாகே என்று பிரபலமான எலெக்ட்ரானிக் இன்வென்சன் கிட்கள் குறித்தும் இந்த வீடியோவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை மக்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Musician playing ‘melon slices’ to come up with peppy tune impresses internet

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Music watermelon video views trending viral man creates music playing watermelon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X