சிவன் ஆலயத்தை நிர்வகிக்கும் இஸ்லாமிய குடும்பம்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு இலக்கணம்!

இஸ்லாமியர்கள் 'துஆ' வழிபாடும், ஹிந்துக்கள் சிவனுக்கு பூஜையும் செய்வார்கள்

By: Updated: March 5, 2019, 7:10:47 PM

மதத்தை முன்னிறுத்தி வெறுப்பை உமிழும் கூட்டங்களுக்கு இடையே, இங்கே ஒரு இஸ்லாமிய குடும்பம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. குவஹாத்தியில் உள்ள ரங்கமஹால் கிராமத்தில் இருக்கும் 500 வருடங்கள் பழமையான சிவன் கோவிலை ஒரு இஸ்லாமிய குடும்பம் நிர்வகித்து வருகிறது.

இந்தக் கோயிலுக்கு ஹிந்து, முஸ்லீம் என இரு மதத்தினரும் ஒருசேர வழிபாடு நடத்துவது கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. ஹாஜி மதிபர் ரெஹ்மான் என்பவர் தான் இந்த கோவிலை பராமரித்து வருகிறார். இவர், சிவபெருமானை என்னுடைய முப்பாட்டன் என்கிறார்.

இதுகுறித்து ரெஹ்மான் கூறுகையில், “நான் சிவனை தாத்தா என்று தான் அழைப்பேன். இது 500 வருடங்கள் பழமையான கோவில். எங்கள் குடும்பம் தான் இதனை நிர்வகித்து வருகிறது. இங்கே, ஹிந்து, முஸ்லீம் என இரு மதத்தினரும் வந்து வழிப்பட்டுச் செல்வார்கள்.

இஸ்லாமியர்கள் ‘துஆ’ வழிபாடும், ஹிந்துக்கள் சிவனுக்கு பூஜையும் செய்வார்கள். அனைவரது வேண்டுதலும் இந்த ஆலயத்தில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆலயம் மீது ரெஹ்மான் குடும்பம் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு குறித்து சிலாகித்து பேசுகின்றனர். மேலும், இந்த கோவில் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு இலக்கணமாக செயல்படுவதாகவும் பெருமை கொள்கின்றனர்.

மதம், ஜாதி கொண்டு எவ்வளவு தான் பிரிக்க நினைத்தாலும், அன்பு, ஒற்றுமை, மனித நேயம் போன்றவற்றை வெளிப்படுத்தும் ரெஹ்மான் குடும்பம் நிச்சயம் ஒரு முன்மாதிரி தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Muslim family has been caring for assams 500 yo shiva temple for generations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X