ஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு

இதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், பெண்கள் பலரும் தாங்கள் பொது இடங்களில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களை #Metoo என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து வந்தனர். இது உலகம் முழுவதிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேபோல், ஹஜ் புனித பயணத்தின்போது தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலை முகநூலில் பகிர்ந்துள்ளார். இதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபீகா கான் என்ற அந்த பெண்மணி பகிர்ந்துள்ள அப்பதிவு தற்போது முகநூலில் இல்லை. இருப்பினும், அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அப்பதிவில், ஹஜ் புனித யாத்திரையில் கடும் மக்கள் கூட்டத்தினிடையே பயணம் மேற்கொண்டிருந்தபோது, தன் உடலின் பின்புறத்திலும், மார்பக பகுதியிலும் கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். முதலில் தான் கூட்ட நெரிசலில் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என நினைத்ததாகவும், ஆனால், தொடர்ந்து அதேபோன்று நிகழ்ந்ததால் தான் அச்சம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக தன்னால் வேறு எங்கும் நகர முடியவில்லை என அப்பெண் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு புனித தலமாக கருதப்படும் ஹஜ் பயணத்தில் இவ்வாறு நடந்ததை தான் வெளியே சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள் என அப்பெண் நினைத்ததால், தன் தாயிடம் மட்டும் அச்சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனை முகநூலில் அவர் பகிர்ந்த பின், பல பெண்கள் மத வழிபாட்டு தலங்களில் தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

×Close
×Close