முத்த மழை: தீ வெர்ஷனா, சின்மயி வெர்ஷனா?... கலா மாஸ்டர் வெர்ஷன்; ஸ்பாட்டிஃபை அதிர்ச்சி!

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், நேரடியாக படக்குழுவினரையே டேக் செய்து, "'முத்த மழை' பாடலின் தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் போன்று 'குத்துப் பாடல்' வெர்ஷன் எப்போது வரும்?" என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், நேரடியாக படக்குழுவினரையே டேக் செய்து, "'முத்த மழை' பாடலின் தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் போன்று 'குத்துப் பாடல்' வெர்ஷன் எப்போது வரும்?" என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

author-image
Meenakshi Sundaram S
New Update
mutha mazhai kala master version

முத்த மழை: தீ வெர்ஷனா, சின்மயி வெர்ஷனா?... கலா மாஸ்டர் வெர்ஷன்; ஸ்பாட்டிஃபை அதிர்ச்சி!

மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கமல்-சிம்பு கூட்டணி என பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ”தக் லைஃப்" திரைப்படமானது கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியானது. படம் எதிர்ப்பார்த்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியினை பெறாதபோதிலும், தக் லைஃப் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்ற சில பாடல்கள் மெகா ஹிட் அடித்தது. குறிப்பாக "முத்த மழை" பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஆல்பத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலினை, பாடகி தீ பாடியிருந்தார். ஆடியோ வெளியீட்டு நிகழ்விற்கு பாடகி தீ வர முடியாத காரணத்தினால் “முத்த மழை” பாடலை சின்மயி பாடினார்.

Advertisment

ரசிகர்கள் மத்தியில் சின்மயி பாடிய வெர்ஷன் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சின்மயி வெர்ஷனில் “முத்த மழை” பாடலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரே வெளியிட்டார்கள். படத்தில் பாடகி தீ வெர்ஷன் இடம்பெறுமா? சின்மயி வெர்ஷன் இடம்பெறுமா? என ரசிகர்கள் ஆவலோடு படம் பார்க்க சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு காரணம், படத்தில் இப்பாடலின் எந்த வெர்ஷனும் இடம் பெறவில்லை. தக் லைஃப் திரைப்படமே திரையரங்குகளை விட்டு வெளியேறிய நிலையில், சமூக வலைத்தளத்தில் “முத்த மழை” பாடல் ஏதோ ஒருவகையில் டிரெண்டிங்கில் இருந்துக் கொண்டுதான் உள்ளது. யூடியுப்பில் பதிவிடப்பட்டுள்ள ”முத்த மழை” சின்மயி வெர்ஷன் பாடலானது 62 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

சம்மந்தமே இல்லாமல், பல வருடங்களுக்கு முன்பு நடந்த பிரபலமான நடன நிகழ்ச்சி 'மானாட மயிலாட' சீசனில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆடிய ஒரு நடனம், இப்போது நெட்டிசன்களின் புதிய மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது. உண்மையில், கலா மாஸ்டர் அந்த நடனத்தை 'குத்து' பாடலுக்காகத்தான் ஆடியிருப்பார். ஆனால் இணையவாசிகள் சும்மா இருப்பார்களா? அந்த வீடியோவின் ஒரிஜினல் பின்னணி இசையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வேறு பலவிதமான பாடல்களைப் பொருத்தி, வீடியோக்களை உருவாக்கிப் பதிவிடத் தொடங்கினர். இதுவே இந்த வைரல் கலாச்சாரத்தின் ஆரம்பம்.

இந்த வரிசையில், தற்போது அனைவரையும் கவர்ந்தது 'முத்த மழை' பாடலுக்கு கலா மாஸ்டர் ஆடியது போல உருவாக்கப்பட்ட வீடியோதான். வழக்கமாக மெல்லிய உணர்வுகளுடன் வரும் 'முத்த மழை' பாடலை, வேகமான 'குத்து' பாடலாக மாற்றி, அதற்கு கலா மாஸ்டர் ஆடுவது போல ஒரு வீடியோவை யாரோ ஒருவர் உருவாக்கி இணையத்தில் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவியது.

Advertisment
Advertisements

தொடர்ந்து, நெட்டிசன்கள் நேரடியாக படக்குழுவினரையே டேக் செய்து, "முத்த மழை பாடலின் 'ஃபயர் வெர்ஷன்', 'சின்மயி வெர்ஷன்' 'குத்து' பாடல் வெர்ஷன் எப்போது வரும்?" என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

“ஸ்பாட்டி பை (இந்தியா)” தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், “மன்னிக்கவும். முத்த மழை குத்து வெர்ஷன் எங்களிடம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளது. இதை ரீ-ட்வீட் செய்து ரசிகர் #Justiceforkalamaster என குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில பயனர்கள் எடிட் செய்யப்பட்ட கலா மாஸ்டர் வீடியோவினை பதிவிட்டு எங்களுக்கு முத்த மழை குத்துபாடல் வேண்டுமென கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர், நான் ஸ்பாட்டிபையை அன் இன்ஸ்டால் பண்ணிருவேன் என்று பாடலைக் கேட்டு மிரட்டுகின்றனர்.
இணையத்தின் ஆதிக்கம், ஒரு பாடலை எவ்வாறு புதிய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறது என்பதற்கும், பழைய படைப்புகள் கூட எவ்வாறு புதிய வடிவங்களில் கொண்டாடப்படுகின்றன என்பதற்கும் 'முத்த மழை' பாடல் சிறந்த எடுத்துக்காட்டு.
Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: