கோவையில் இ.எம்.ஐ மூலமாக மட்டன் சிக்கன் வாங்கிக் கொள்ளலாம் – கோவை குனியமுத்தூர் இறைச்சி கடை உரிமையாளர் அதிரடி அறிவிப்பால் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பொதுவாக டிவி, மிக்ஸி, போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்கள், செல்போன் போன்ற பொருட்களையும் (EMI) தவணை முறையில் வாங்குவது வழக்கம், சாமானிய மக்களுக்கும் இது பழகிய ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த இறைச்சிகடை உரிமையாளர் ரியாஷ் அகமது என்பவர் சிக்கன் மட்டன் (EMI) தவணை முறையில் விற்பனை செய்து வருகிறார். ரம்ஜான் காலம் துவங்கியுள்ளதால், சிக்கன், மட்டன் அதிகளவு வாங்கும் போது பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வாங்கிக்கொள்ள இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இது குறித்து இறைச்சி விற்பனையாளர் ரியாஷ் அகமது கூறியதாவது : கோவை குனியமுத்தூர் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்து வருவதாகவும், எலக்ட்ரானிக், வாகனம் போன்றவற்றிற்கு தவணை கொடுப்பது போல மட்டன் சிக்கன் ஆகிய இறைச்சிகளுக்காக நாம் என் கொடுக்க கூடாது என நினைத்தேன்.
குறிப்பாக சாமானிய மக்கள் ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக இறைச்சி வாங்கும்போது ஒரு பெரிய தொகை செலவு ஆகும். இதனை இஎம்ஐ மூலமாக இறைச்சியை கொடுத்தால் அவர்கள் பாரமின்றி கட்டுவார்கள்.
கறிக்கடை வரலாற்றில் மட்டன் மற்றும் சிக்கன் ரூ.5,000 மேல் வாங்கினால் இ.எம்.ஐ கட்ட மூன்று மாதம் – ஆறு மாதம் – 9 மாதம் மற்றும் 12 மாதம் என தவணை முறையில் கொடுத்து வருகிறோம். மூன்று மாதத்துக்கு வட்டி வெரும் 170 ரூபாய் தான் எனவும்

மேலும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்காக 500, 700 கிலோ வாங்கினால் இதுபோன்று இ.எம்.ஐ மூலமாக வாங்கிக் கொள்ளலாம். ரம்ஜான் பண்டிகைக்காக மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் பொதுமக்களில் நலனுக்காகவே இதனை கொடுத்து வருகிறோம் என கூறினார் . மேலும் பொதுமக்களிடையே இது இ.எம்.ஐ கட்டணம் நல்ல வரவேற்பு பெரும் என இறைச்சி விற்பனையாளர் . ரியாஸ் அஹமத் நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை