வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தனது புது கணவருடன் ஆட்டம் போட்ட டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், சீரியல் நடிகை என பிஸியாக இருந்துவரும் மைனா நந்தினி அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
Advertisment
Advertisements
ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்தார் நந்தினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினியின் கணவர் கார்த்திகேயன் லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சில மாதங்கள் வெளியே தலைக்காட்டாமல் இருந்த நந்தினி சமீபத்தில் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
டிக்டாக் வீடியோ வைரல் : இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தனது புது கணவருடன் நந்தினி மைனா செமயாக ஆட்டம் போட்டிருக்கும் டிக்டாக் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் ஆடி கார் வேண்டும் என மாப்பிள்ளை அடம்பிடிப்பது, மன்னன் பட மியூஸிக்கிற்கு மரத்தடியில் அமர்ந்து இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொள்வதுமாய் உள்ளனர். மேலும் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடலுக்கு நடனமாடுவதாகவும் உள்ளது.
நெட்டிசன்ஸ் கேள்வி : இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் மைனா நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிலர், வருடத்திற்கு ஒரு கணவரா என்றும், இவரையாவது விவாகரத்து செய்யாமல் கடைசி வரை வாழுங்கள் என தெரிவித்துள்ளனர்.