வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்; வைரல் வீடியோ

பாகிஸ்தானில் வானத்தில் மேகங்களுடன் காணப்பட்ட ஒரு மர்ம கருப்பு வளையம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. வானத்தில் தோன்றிய கருப்பு வளையம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Mysterious Black Ring smoke, Black Ring smoke in the sky, வானத்தில் கருப்பு வளையம், கருப்பு புகை வளையம், பாகிஸ்தான் வானில் கருப்பு வளையம், Black Ring on the sky in lahore, pakistan lahore, black ring, black ring Viral Video,

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மக்கள் இதுவரை வானத்தில் வானவில் தோன்றி மட்டுமே பார்த்தவர்கள் திடீரென மேகங்களுடன் வானத்தில் ஒரு மர்ம கருப்பு புகை வளையம் காணப்பட்டதைப் பார்த்து அச்சமடைந்தனர். சிலர் அந்த கருப்பு புகை வளையத்தை தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தனர். சிலர் இந்த கருப்பு வளையத்தை இது ஒரு அன்னிய விண்கலத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். மற்றவர்கள் இது இயற்கையின் மற்றொரு பரிமாணம் என்று ஆச்சரியப்பட்டனர்.

இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 37,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு வளையம் பல டுவிட்டர் பயனாளர்களை வேறொரு உலகில் இருப்பதாக நம்ப வைத்தது. அப்போது, சிலர் உலகின் பிற பகுதிகளில் வானத்தில் தோன்றிய இதே போன்ற கருப்பு வளையங்களின் வீடியோக்களைப் பகிர்ந்து எங்கள் பகுதியிலும் இதே போல தோன்றியுள்ளது என்று தெரிவித்தனர்.

விசித்திரமான இந்த நிகழ்வுக்கு சிலர் லாஜிக்கான விளக்கங்களைக் கூறினர். கருப்பு புகை வளையம் தரையில் ஒரு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இத்தகைய வட்ட புகை சுழல்கள் இதற்கு முன் பல முறை தோன்றியுள்ளன. உதாரணமாக, 2014 ஆம் ஆண்டில், ஒரு எலக்ட்ரிகல் டிரான்ஃபார்மர் எரிந்த புகையின் மூலம், இங்கிலாந்தில் லீமிங்டன் ஸ்பா மீது வானத்தில் மர்மமான கருப்பு வளையம் தோன்றியது.

2012 ஆம் ஆண்டில் சிகாகோவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான புகை வளையம் காணப்பட்டதாக என்.பி.சி நியூஸ் தெரிவித்துள்ளது. இது மின் மின்மாற்றி காரணமாக வெடித்தது.

அதனால், லாகூரில் ஏற்பட்ட கருப்பு புகை வளையமும் அப்படிப்பட்டதுதான் என்று தெரிந்தபின் பலரும் அமைதியடைந்தனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mysterious black ring smoke seen over lahore in viral video

Next Story
காட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா? சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்!malnourished lions spark outrage online, Al Qureshi Lions, Sudan Lions
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com