நாக்பூரில் வீட்டு பால்கனி வழியாகச் செல்லும் ரூ.998 கோடி மேம்பாலம்: மனிதநேயம் இல்லாத வளர்ச்சி: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நாக்பூர் மேம்பாலம் ஒரு வீட்டின் பால்கனி வழியாக செல்கிறது. நாக்பூர் நகராட்சி அந்த வீட்டை சட்டவிரோதமானக் கட்டுமானம் என்று முத்திரை குத்தியுள்ளது.

நாக்பூர் மேம்பாலம் ஒரு வீட்டின் பால்கனி வழியாக செல்கிறது. நாக்பூர் நகராட்சி அந்த வீட்டை சட்டவிரோதமானக் கட்டுமானம் என்று முத்திரை குத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
nagpur flyover 2

நாக்பூர் மாநகராட்சி (என்.எம்.சி) அந்த வீட்டை சட்டவிரோத கட்டுமானம் என முத்திரை குத்தியுள்ளது.

நாக்பூரின் பிரம்மாண்டமான ரூ.998 கோடி மதிப்பிலான இந்தோரா - டிகோரி மேம்பாலம் தற்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. அசோக் சதுக்கத்தில், ஒரு குடும்பத்தின் வீட்டின் பால்கனியை ஒட்டி, கான்கிரீட் அமைப்பு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. மேம்பாலத்தின் ஒரு பகுதி, ஒருவரின் வீட்டுக்குள் நுழைவது போலத் தோன்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

டைனிக் ஜாக்ரன் (தினசரி ஜாக்ரன்) நாளிதழ் செய்தியின்படி, அந்த குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்புதான் நோட்டீஸ் கிடைத்தது என்றும், “எந்தவொரு இழப்பீடும், சரியான விளக்கமும் இல்லை” என்றும் தெரிவித்தனர். அவர்களுக்கு, வைரலான மீம்கள் வேடிக்கையாக இல்லை, அதுதான் அவர்களின் அன்றாட யதார்த்தம்.

வீடியோவைப் பாருங்கள்:

கமல் சௌக், ரேஷிம்பாக் சதுக்கம் மற்றும் டிகோரி இடையே பயணத்தை எளிதாக்கத் திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம், “மாபெரும் திட்டங்கள் மக்களின் வீட்டு வாசலில் மோதுவது” எப்படி என்பதற்கு ஒரு எச்சரிக்கை கதையாக மாறியுள்ளது. இணையத்தில், இதனை “மோசமான் திட்டமிடல்” மற்றும் “மனிதாபிமானம் இல்லாத வளர்ச்சி” என விமர்சித்துள்ளனர்.

Advertisment
Advertisements

அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். நாக்பூர் மாநகராட்சி (என்.எம்.சி) அந்த வீட்டை அங்கீகரிக்கப்படாத திட்டமிடல் கொண்ட, சட்டவிரோத கட்டுமானம் என அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.ஹெச்.ஏ.ஐ) இந்தத் திட்டம் “அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புகளின்படி மட்டுமே” இருப்பதாக வலியுறுத்துகிறது. பால்கனி சட்டவிரோதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், அது இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலம் மற்றும் கட்டிடத்திற்கு இடையே இன்னும் 1.5 மீட்டர் இடைவெளி இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். என்.ஹெச்.ஏ.ஐ அதன் எக்ஸ் பக்கத்தில், “என்.ஹெச்.ஏ.ஐ இந்த ஆக்கிரமிப்பை அடையாளம் கண்டுள்ளது, மேலும் அதனை அகற்ற நாக்பூர் மாநகராட்சியிடம் (@ngpnmc) முறையாகக் கோரியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளது.

இது பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கவில்லை. உள்ளூர் எம்.எல்.ஏ-வான பிரவீன் தட்கே கூட தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “அங்கீகரிக்கப்படாதது” என்றாலும், மக்களுக்கு கடைசி நிமிட அறிவிப்புகள் மற்றும் இழப்பீடு இல்லாமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று குடியிருப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்த வைரல் வீடியோக்களின் பின்னூட்டங்கள் கருத்துக்களின் போர்க்களமாக மாறியுள்ளன. ஒரு பயனர், “காட்சிகளைப் பார்க்கும்போது, ​​வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று எவரும் கூறுவார்கள். ஆனால், நாமும் என்.ஹெச்.ஏ.ஐயைக் குறை கூறி, புத்திசாலித்தனமாகத் தெரிவோம். நீங்கள் ஆக்கிரமித்திருந்தால், உங்கள் பாதுகாப்பைப் பற்றி குறைந்தபட்சம் கவலைப்பட வேண்டும்” என்று எழுதினார். மற்றொருவர், “அந்த வீட்டில் யாரோ வரி செலுத்தி வருகிறார்கள். வீட்டிற்குள் மேம்பாலம் வரவும் வரி செலுத்துகிறார்கள் போல. ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒவ்வொரு ரூபாயும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாமவர், “அவர்கள் இதையும் நியாயப்படுத்துவார்கள், வீட்டைச் சட்டவிரோதமாக்குவதன் மூலம் அல்லது இங்கே ஒரு மாடிக்கு மேல் கட்ட முடியாது என்று சொல்வதன் மூலம்” என்று கூறினார். இன்னொருவர், “நல்லது. அவர்கள் தங்கள் காரை அந்த மேம்பாலத்தில் நிறுத்தி, ஓட்டிச் செல்லலாம்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: