New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/namitha.jpg)
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
தென்னிந்திய பட நடிகை நமிதா தனது குடும்ப உறவுகளுடன் பொங்கல் கொண்டாடியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
2015 ஆம் ஆண்டு அரசியலில் களம் இறங்கபோவதாக அறிவித்த நமிதா, அஇஅதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கட்சி சார்பாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறக்கு அதிமுகவில் இருந்து வெளிவந்து, பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நமிதா தன் வீட்டு வாசலில் போட்ட கோலம் தற்போது வைரலாகி வருகிறது. கோலத்தில் தாமரையில் உள்ள இரண்டு இலைகளில் பச்சை வண்ணன கோலத்தை இடுகிறார். கிட்டத்தட்ட, அஇஅதிமுகவின் இரட்டை இலையை குறிப்பதாய் இது அமைகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் நமிதா. 2002ஆம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமான நமிதா, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட நமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.