/tamil-ie/media/media_files/uploads/2019/11/ajith-balakrishna.jpg)
Nandamuri Balakrishna dances for Thala Ajith's song, Nandamuri Balakrishna dances for Thala Ajith's song aaluma doluma song,தல அஜித் பாட்டுக்கு நடனம் ஆடிய தெலுங்கு சினிமா மாஸ் ஹீரோ, ajith's mass song aaluma doluma,நந்தமுரி பாலகிருஷ்ணா, Nandamuri Balakrishna mass dance, Nandamuri Balakrishna's ruler movie, Nandamuri Balakrishna mass dance video viral
தெலுங்கு சினிமா உலகின் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா கோலிவுட் நடிகர் அஜித் பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் பார்வையாளர்களை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது. அப்படி அவர் என்ன பாட்டுக்கு ஆடினார் என்று வீடியோவைப் பாருங்கள்.
தெலுங்கு சினிமா உலகமான டோலிவுட்டின் ‘மாஸ் ஹீரோ’ நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளும் அவரது நடனமும் ரோமான்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பும் ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பிரபலம்தான்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
தெலுங்கு சினிமா ‘மாஸ் ஹீரோ’ நந்தமூரி பாலகிருஷ்ணா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது, அங்கே, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித் நடித்த விவேகம் படத்தில் இடம் பெற்ற ‘ஆளுமா டோலுமா...’ என்ற பாடல் ஒலிக்க அந்தப் பாட்டுகு நந்தமூரி பாலகிருஷ்ணா தனது ஸ்டைலில் ஆடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் பகிர்ந்ததால் அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
#NandamuriBalakrishna#Ajith#AalumaDolumapic.twitter.com/VRA2pYVZxu
— Heyandhra Telugu (@HeyANDHRA4u) November 28, 2019
தமிழில் அஜித் நடனம் ஆடிய ஆளுமா டோலுமா பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அடுத்த படம் ‘ரூலர்’. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். அவருடன் இந்த படத்தில் வேதிகா, சோனல் சவுகான், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சயாஜி ஷிண்டே மற்றும் பூமிகா சாவ்லா ஆகியோர் நடிக்கின்றனர். ரூலர் படத்துக்கு சிரந்தன் பாட் இசையமைத்துள்ளார். பாலகிருஷ்ணாவின் ரூலர் படம் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.