Advertisment

பெங்களூருவின் பிரபல கடையில் மகள் அக்ஷதாவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நாராயண மூர்த்தி; வைரல் புகைப்படம்

பெங்களூருவில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடையில் மகள் அக்ஷதாவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நாராயணமூர்த்தி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்; நெட்டிசன்கள் வரவேற்பு

author-image
WebDesk
New Update
narayana murthy and akshata

நாராயண மூர்த்தியும் அவரது மகள் அக்ஷதாவும் பெங்களூருவில் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர் நாராயண மூர்த்தி மற்றும் பிரிட்டனின் முதல் குடிமகளான அவரது மகள் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் ஐஸ்கிரீமை ருசித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Narayana Murthy relishes ice cream with daughter Akshata in Bengaluru. See viral photo

நாராயண மூர்த்தியும் அக்ஷதா மூர்த்தியும் ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டிருந்தப்போது கடையில் இருந்த பல வாடிக்கையாளர்கள் அவர்களைப் புகைப்படம் எடுத்தனர். வைரலான புகைப்படத்தில், ஜெயநகரில் உள்ள கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம்ஸ் கடையில் அக்ஷதா தனது தந்தையின் அருகில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி ஐஸ்கிரீம் கோப்பைகளை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு எக்ஸ் வலைதளப் பயனர் அதே படத்தைப் பகிர்ந்தார் மற்றும் ஐஸ்கிரீம் கடையில் நாராயண மூர்த்தி மற்றும் அக்ஷதா மூர்த்தியுடன் தனது அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். "#பெங்களூரு #ஜெயநகர் #கார்னர்ஹவுஸ்' இடம் நிரம்பியிருந்தது.... அவர்கள் அமைதியாக வந்து தங்களுடைய ஐஸ்க்ரீம்களை வாங்கினர்... நல்லவேளையாக ஊழியர்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு நாற்காலிகளைப் கொடுத்தனர். அவர்களை புகைப்படம் எடுத்தப்போது இயல்பாக இருந்தனர்எங்களுக்குப் பிடித்த ஐஸ்கிரீம்கள் இங்கிலாந்தின் முதல் குடிமகள் மற்றும் அவரது தந்தை, இந்தியாவின் ஐ.டி கிங் ஆகியோரால் இலவசமாக அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி! #கார்னர்ஹவுஸ் எப்போதும் சிறந்தது!! பெங்களூரு ஆவோ தோ ஜரூர் காவோ,” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், “ஒரே படத்தில் மூன்று பெங்களூரு சின்னங்கள். என்.ஆர் நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனர், அக்ஷதா மூர்த்தி, கிரேட் பிரிட்டனின் முதல் குடிமகள் மற்றும் கார்னர் ஹவுஸ் பெங்களூருவின் சிறந்த ஐஸ்கிரீம் கடை!!” என்று பதிவிட்டார்.

"இங்கிலாந்தின் முதல் குடிமகளின் எளிமையைப் பாருங்கள். ஹமாரே யஹா டோ கவுன்சிலர் பி 2-3 ஃபார்ச்சூனர் லெகர் ஜடே ஹை பான் கானே,” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், அக்ஷதா மூர்த்தி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தந்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய இரவு விருந்திலும் தம்பதியினர் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலிலும் ஆசி பெற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo Infosys Narayanamurthy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment