New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/27/eopard-attack-bikers-on-zoo-park-road-2025-07-27-13-07-52.jpg)
ஜஸ்ட் மிஸ்.. பைக் மீது பாய்ந்த சிறுத்தை! திருப்பதியில் திக் திக்!
திருப்பதி மலையடிவாரத்தில் பைக்கில் சென்ற இருவரை சிறுத்தை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக பைக்கில் சென்றவர்கள் உயிர் தப்பினர்.
ஜஸ்ட் மிஸ்.. பைக் மீது பாய்ந்த சிறுத்தை! திருப்பதியில் திக் திக்!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி மலைப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால், அவ்வப்போது சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து, உயிரிழப்புகளும் நேர்ந்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஜூபார்க் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென அவர்கள் மீது பாய்ந்து தாக்க முயன்றது. பைக்கில் பயணித்தவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்ததால், சிறுத்தையின் பாய்ச்சலிலிருந்து நொடிப்பொழுதில் தப்பினர். இருப்பினும், பின்னால் அமர்ந்திருந்தவர் சிறுத்தையைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்தச் சம்பவம், அவர்களுக்குப் பின்னால் வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஜஸ்ட் மிஸ்.. பைக் மீது பாய்ந்த சிறுத்தை! திருப்பதியில் திக் திக்!#Tirupati #leopardattack pic.twitter.com/aNc00uNfr2
— Indian Express Tamil (@IeTamil) July 27, 2025
இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, திருப்பதி மலை அடிவாரம் முதல் மலைப்பகுதி வரை இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலும், திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை தென்பட்டது. அதிகாலை 1 மணியளவில் காலிகோபுரம் கடைகளுக்கு அருகில் அது சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. நல்லவேளையாக, அப்போது பக்தர்கள் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தச் சமயத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பக்தர்கள் குழுக்களாக மட்டுமே நடந்து செல்ல அனுமதிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.