/tamil-ie/media/media_files/uploads/2020/06/janani-sathankulam1-3.jpg)
NASA, Spacewalk, விண்வெளியில் கண்ணாடியை இழந்த நாசா வீரர், நாசா, space junk, Mirror lost in space, NASA astronaut loses mirror during spacewalk, US astronaut, NASA spacewalk, Trending news, Tamil Indian Express news
விண்வெளி நடைப் பயணத்தின்போது நாசா விண்வெளி வீரர் தனது விண்வெளி உடையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய கண்ணாடியை தவறவிட்டபோது அது பூமியைச் சுற்றும் மில்லியன் கணக்கான குப்பைகளுடன் சேர்ந்ததாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி மாற்றும் வேலைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐ.எஸ்.எஸ்) வெளியேறும்போது அமெரிக்க கம்மண்டர் கிறிஸ் கேஸ்ஸிடி கண்ணாடியை இழந்தார். கிறிஸ் கேஸ்ஸிடி மற்றும் பாப் பென்கென் ஆகியோர் விண்வெளியில் அவர்கள் முதலில் குறைந்தது நான்கு விண்வெளி நடைபயணத்தை நடத்தினர். விண்வெளி நிலையத்தின் பேட்டரிகளை மாற்றியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருப்பினும், இழந்த பொருள் விண்வெளி நடைபயணத்துக்கு அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நாசா கூறியதை ஏ.பி. செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறும்போது விண்வெளி வீரர்கள் நன்றாக பார்ப்பதற்கு விண்வெளி நடை பயணத்தில் தங்கள் விண்வெளி உடையின் 2 ஸ்லீவ்ஸ்களிலும் மணிக்கட்டு கண்ணாடியை அணிந்துகொள்கிறார்கள்.
பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டபோது வரலாறு படைத்தனர். இது அரசாங்க - தனியார் கூட்டாண்மை மூலம் முதல் மனித விண்வெளிப் பயணத்தைக் குறிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.