Nasa posts breathtaking picture of 300-year-old supernova remnant : 300 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்நோவா நிகழ்வால், பூமியில் இருந்து 11 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரம் வெடித்து சிதறியது. சிதறுண்ட நட்சத்திரத்தின் மீதங்கள் வானில் மிதந்த வண்ணம் உள்ள நிலையில் அந்த சூப்பர்நோவா வெடிப்பால் உருவான நட்சத்திர சிதறல்களை நாசா படம் பிடித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மூன்று ஆய்வகங்களைப் பயன்படுத்தி “காசியோபியா ஏ” வெடிப்பு உதவியால் இந்த புகைப்படம் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டது என்பதையும் விளக்கியுள்ளது நாசா.
சூப்பர்நோவா அல்லது நட்சத்திர வெடிப்பு என்பது வானில் நிகழும் மிகப்பெரிய நிகழ்வாகும். நாசா இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் லட்சக் கணக்கானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.
இது நாள் வரையில் நாங்கள் கண்ட மிகவும் அழகான புகைப்படம் என்றால் நிச்சயமாக இதுவாக தான் இருக்கும் இன்றும், வெற்றுக் கண்ணால் வானில் இதனை பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
படத்தில் உள்ள வெவ்வேறு நிறங்கள் ஒவ்வொரு ஆய்வகத்தால் கைப்பற்றப்பட்ட வெவ்வேறு விவரங்களை வழங்குகின்றன, இது வானியலாளர்களுக்கு காஸ் ஏ பற்றிய முழுமையான பார்வையை அளிக்கிறது.
நீலம் மற்றும் பச்சை நிறங்கள் எக்ஸ் கதிர்களுக்கான தரவு. இது நாசாவில் உள்ள சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாயுக்களை காட்டுகிறது. சூப்பர்நோவாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பொருட்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 மில்லியன் மைல் வேகத்தில் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசிக்குள் நொறுக்கப்பட்ட போது இந்த சூடான வாயு உருவாக்கப்பட்டது என்று அந்த புகைப்படத்தின் கீழ் டிஸ்கிரிப்சனில் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ப்டைசர் ஸ்பேஸ் டெலெஸ்கோப் ஆய்வகம் சிவப்பு நிறத்திற்கான அகச்சிவப்பு கதிர்களின் தரவுகளை வழங்கியது. இது “சுமார் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெளிப்புற ஷெல்லில்” சூடான தூசியைக் காட்டுகிறது. மஞ்சள் என்பது நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியிலிருந்து பெறப்பட்ட ஆப்டிகல் தரவு. சுமார் 10,000 டிகிரி செல்சியஸ் வெப்ப வாயுக்களின் மென்மையான இழை அமைப்பை இது காட்டுகிறது.