நயன்தாராவுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டமா? என்ன காரணம்?

மேலும் மேலும் கூடிக் கொண்டே செல்கிறதே தவிர,ஒருபோதும் குறையவில்லை.

நயன்தாராவை கொஞ்சிய சிறுமி
நயன்தாராவை கொஞ்சிய சிறுமி

நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறுமியை க்யூட்டாக, இல்லை இல்லை சிறுமி ஒருவர் நயன்தாராவை க்யூட்டாக கொஞ்சிய வீடியோ தான் இன்றைய வைரல்.

நயன்தாராவை கொஞ்சிய சிறுமி:

முதல் வரியில்  நயன்தாரா  சிறுமியை கொஞ்சியது என கூறிவிட்டு பின்பு தடுமாறியதற்கு காரணம் இதுதான். எப்போதுதே  நயன்தாரா எதையாவது செய்தால் சோஷியல் மீடியாவில் வைரலாகும். ஆனால் சற்று வித்யாசமாக  இம்முறை நயன்தாராவுடன் இருக்கும் சிறுமி வைரலாகிவிட்டார்.

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகர்களுக்கு இருக்கும் ஃபேன்ஸ் பட்டாளம், மாஸ் எண்ட்ரீ, பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாமே ஒரு பெண் நடிகைக்கும் இருக்கிறது என்றால் அது நடிகை நயன்தாராவிற்கு மட்டும் தான். காதல், கல்யாணம் என்று நயன்தாரா எவ்வளவு சர்ச்சையில் சிக்கினாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈடுப்பாடு மேலும் மேலும் கூடிக் கொண்டே செல்கிறதே தவிர,ஒருபோதும் குறையவில்லை.

ஒருபக்கம் விக்னேஷ் சிவனுடன் காதல், அமெரிக்கா ட்ரிப் என்று நயன் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேர்த்தியான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் நயன் தெளிவாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 2 ஆவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது. நடிகை நயன் மற்றும் நடிகர் சிவா இனைந்து நடனமாடும் காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கையில் நடந்தது அந்த சுவாரஸ்யமான நிகழ்வு. அந்த பக்கம் சென்ற சிறுமி ஒருவர் நயன்தாராவை அடையாளம் கண்டு ஓடி வந்துள்ளார்.

இதைக் கவனித்த நயன், அந்த சிறுமியை அழைத்து ஆசைத் தீர கொஞ்சினார். பதிலுக்கு அந்த சிறுமியோ நயனை கொஞ்சம் ஆரம்பித்து விட்டார். நயன் சிறுமியை கொஞ்சியது அழகு என்றால்.. அந்த சிறுமி நயனை கன்னம் தொட்டு தொட்டு கொஞ்சிய அழகோ அழகு.

இந்த வீடியோவை உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் நயன் ஷேர் செய்தார். அவ்வளவு தான் வழக்கம் போல் அந்த வீடியோ 2மணி நேரத்தில் வைரலாக தொடங்கியது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த குழந்தையின் க்யூட் ரியாக்‌ஷன்கள் பற்றி அதிகம் பேசி வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara recent viral video

Next Story
தன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா! 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனைThis 102-year-old woman is now the oldest skydiver in the world
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com