நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வழக்கம் போல் வைரலாகி வருகிறது.
நயன்தாரா ஹாப்பி:
விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரசிகர்களிடம் ஆல் டைம் ஃபேவரெட் நடிகையாக இருக்கும் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் இவர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், ஸ்டேட்டஸ், ட்ரெஸிங் கோட் என ஏகப்பட்ட காரணங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது.பொதுவாகவே பிரபல நடிகை காதலிப்பது தெரிந்தால் அதை ரசிகர்கள் பலரும் பலவகையாக விமர்சிப்பார்கள்.
தீவிர ரசிர்கள் என்றால் லைட்டாக பொறாமஒ கூட படுவார்கள். ஆனால், விக்னேஷ் – நயன் விஷயத்தில் இது எதிர்மறையாக அமைந்துள்ளது. இவர்களின் ஜோடியை பலரும் ரசித்து லைக்ஸ்களை அளித்து குவித்துவிடுகின்றன.அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று விக்னேஷ், நயன் தாராவுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் சீண்டி பார்த்துள்ளார்.
முதலில் நல்லப்படியாக ரசிகர்களுக்கு விநாயர் சதுர்த்தி வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன், அடுத்து நயனுடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த படத்தில் நயன் வெக்கத்துடன் விக்னேஷ் சிவன் அருகில் நின்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ”தலைவி… எப்படி உங்களால் மட்டும் இப்படி இருக்க முடியுது? படத்தில் போலீஸ், கலெக்டர், கொலைகாரினு நடிப்பில் அடிச்சி தம்சம் பண்றிங்க.. ஆனா விக்னேஷ் சிவன் பக்கத்தில் ஏதுவே தெரியாத மாதிரி இருக்கிறீங்க” என்று கலகலப்பான பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நயன் தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்து அவரின் மவுசை கூடி வருகிறது.