ஒரு பவுச்க்கு இந்த அக்கப்போரா? எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்... நீயா நானா ஷோவில் வியக்க வைத்த சிறுமி!

விஜய் டிவியின் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் சிறுமி தனது தாய் பரணில் இருக்கும் ஒரு பவுச்சை எடுத்து தரமாட்டேங்கிறார் என்று புகார் கூற அதற்கு அம்மா மறுப்பு கூறியதும் சிறுமி படபடவென உண்மையைப் பேசிப் பொரிந்து தள்ளியதால் தொகுப்பாளர் கோபிநாத்தே வியந்துபோன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Neeya Nana daughter mother

இந்த சுவாரசியமான அழகான மகிழ்ச்சியான விவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் சிறுமி தனது தாய் பரணில் இருக்கும் ஒரு பவுச்சை எடுத்து தரமாட்டேங்கிறார் என்று புகார் கூற அதற்கு அம்மா மறுப்பு கூறியதும் சிறுமி படபடவென உண்மையைப் பேசிப் பொரிந்து தள்ளியதால் தொகுப்பாளர் கோபிநாத்தே வியந்துபோன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா விவாத நிகழ்ச்சி பெரும் வரவேற்புடன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில், சமூகம், அரசியல், பொழுதுபோக்கு, கலை, சினிமா, குடும்ப உறவுகள் என எல்லா விஷயங்களைப் பற்றிய தலைப்புகளிலும் விவாதங்கள் நடத்தி வருகின்றனர். நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் இருதரப்பாக எதிரெதிர் பக்கங்களில் அமர்ந்து தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர். 

அந்த வகையில், சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட நீயா நானா விவாத நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது பவுச் உடைந்துவிட்டது. வீட்டில் பரணில் ஒரு பவுச் இருக்கிறது. அம்மா அந்த பவுச்சைக் கூட எடுத்து தரமாட்டேங்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு, சிறுமியின் தாய், ஒரு பவுச் உடைந்த பிறகு, பரணில் இருக்கும் பவுச்சை எடுத்து தரலாம் என்று கூற, சிறுமி உடனடியாக தன்னுடைய பவுச் முழுவதுமாக உடைந்து பார்ட் பார்ட்டாக இருக்கிறது. அப்போதும் கூட பரணில் இருக்கும் அந்த பவுச்சை எடுத்து தரமாட்டேங்கிறார்கள் என்று படபடவென கூறுகிறார். 

Advertisment
Advertisements

இதற்கு தாய் மறுப்பு கூற முயற்சிக்கும்போது தொகுப்பாளர் கோபிநாத் குறுக்கிட்டு இனிமேல் நீங்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் மகள் படபடவென பதிலடி கொடுக்கிறார் என்று சொல்ல, அந்த தாய் மகளின் பேச்சைக் கேட்டு சந்தோஷமும் அதே நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் இப்படி போட்டு வெளுக்கிறாளே என்கிற விதமாக சமாளிக்கிறார்.

தொடர்ந்து பேசும் சிறுமியின் தாய், இப்படிதான் வீட்டில் ஹோம் வொர்க் சொல்லிக்கொடுத்தால் நிறைய டவுட் கேட்கிறாள், 100 டவுட் கேட்கிறாள் என்று புகார் கூறுகிறார்.

இதற்கு சிறுமி படிக்கும்போது டவுட் கேட்டா தப்பா சார், ஸ்கூல்ல, டவுட் கேட்க கையை தூக்கினால், அந்த மேம், எதற்கு கையைத் தூக்குகிறாய் என்று கேட்டு பதில் சொல்ல மாட்டேங்கிறார்கள். அதே போல, அம்மாவிடம் டவுட் கேட்டால் அவர்களும் பதில் சொல்ல மாட்டேங்கிறார்கள். அப்போது எனக்கு வந்துச்சு பாரு கோவம், நான் யாரைத்தான் டவுட் கேட்பது என்று கேட்டு சிறுமி தாயை மட்டுமல்ல பார்வையாளர்கலையும் திணறடிக்கிறார். உண்மையில், சிறுமியின் பேச்சில் மகிழ்ந்துபோன தொகுப்பாளர் சிறுமியைப் பாராட்டுகிறார்.

இந்த சுவாரசியமான அழகான மகிழ்ச்சியான விவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஒரு பவுச்சுக்கு இந்த அக்கப்போரா என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.

Neeya Naana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: