வைரல் புகைப்படம்: மைக்ரோசாஃப்ட் வார்ட்-ஐ கரும்பலகையில் வரைந்து எளிமையாக விளக்கும் ஆசிரியர்

மைக்ரோசாஃப்ட் வார்ட் குறித்து விளக்க, அதனை முழுவதும் கரும்பலைகையில் வரைந்து விளக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்களுக்கு கடினமான பாடங்களை எளிமையாக விளக்குவதற்கு பல ஆசிரியர்கள் பெரும் சிரத்தை எடுப்பார்கள். அப்படித்தான், கானா நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எளிமையாக மைக்ரோசாஃப்ட் வார்ட் குறித்து விளக்க, அதனை முழுவதும் கரும்பலைகையில் வரைந்து விளக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் ஓவுரா குவாடோ ஹோட்டிஷ் (Owura Kwadwo Hottish) என்ற ஆசிரியர், மைக்ரோசாஃப்ட் வார்ட் குறித்து, தன் மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவதற்கு அதனை கரும்பலலகையில் வரைந்து விளக்கிய புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

மாணவர்களின் நலனுக்காக இத்தகைய புதிய யுக்தியை கையாண்ட இந்த ஆசிரியரை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

×Close
×Close