Advertisment

'முதலில் உங்க கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுங்க': இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மீது நெட்டிசன்கள் தாக்கு

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறிய கருத்துக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்

author-image
WebDesk
New Update
Netizens disagree Narayana Murthy views on 70 hour work week Tamil News

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இந்திய இளைஞர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான (சி.இ.ஓ) நாராயண மூர்த்தி வலியுறுத்தி இருந்தார்.

Infosys-narayanamurthy | social-media-viral: வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இந்திய இளைஞர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான (சி.இ.ஓ) நாராயண மூர்த்தி வலியுறுத்தி இருந்தார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்துகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

Advertisment

நாராயண மூர்த்தியின் கருத்துக்கு  ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ பவிஷ் அகர்வால் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரையும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். 

3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் 'தி ரெக்கார்ட்' இன் முதல் எபிசோடில், முன்னாள் இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ மோகன்தாஸ் பை உடனான உரையாடலின் போது நாராயண மூர்த்தி, "உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவதற்கு, நாட்டின் இளைஞர்கள் கூடுதல் மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அவர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது" எனக் கூறி இருந்தார்.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவரது கருத்தை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அந்தப் பதிவை இங்கு பார்க்கலாம். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Social Media Viral Infosys Narayanamurthy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment