மெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்!

எதிர்ப்பை காட்டு வகையில் திடீரென்று ‘கட்டிப்பிடிக்க விடுங்கள்’ என்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மெட்ரோ ரயில், நெருக்கமாக சென்ற ஜோடிகளை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொல்கத்தாவில்  ஓடும் மெட்ரோ ரெயிலில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு காதல் ஜோடிகள் கட்டி அணைத்தப்படி பயணித்துள்ளனர். இதைப்பார்த்த ஒரு சிலர் இது ஒழுக்கக் கேடான விஷயம் என்று கூறி இருவரையும் அடித்து உதைத்து ரெயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர்.

இந்த விஷயம் அடுத்த சில மணி நேரத்திற்குள் கொல்கத்தா செய்தி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது.  மேலும், ரெயிலில் பயணித்த ஜோடிகள் புதுமணம் ஆன தம்பதினர் என்றும் கூறப்படுகிறது.   ரயில் பயணிக்கும் போது அவர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்தப்படி பயணிப்பது அவர்களின் விருப்பம் அதை எப்படி  தவறு என்று கூறி,  அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தலாம் என்று  கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான  ஜோடிக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் சிலர் நேற்று கொல்கத்தாவின் டோலி கஞ்ச் மற்றும் டம் டம் மெட்ரோ நிலையங்களின் முன்பாக திரண்டனர்.   எதிர்ப்பை காட்டு வகையில் திடீரென்று  ‘கட்டிப்பிடிக்க விடுங்கள்’ என்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுக் குறித்து  மெட்ரோ ரெயில் செய்தி தொடர்பாளர் இந்திராணி பானர்ஜி கூறுகையில், ‘தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

ரெயிலில் பயணித்த ஜோடிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close