தாயும் நானே.. அதிகாரியும் நானே... இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ!

போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொள்கிறார்

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் கைக்குழந்தையுடன் பெண்போலீஸ் தனது கடமையை தவறாமல் வேலை செய்யும் புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இணையத்தை கலக்கும் அர்ச்சனா:

மத்திய பிரதேசத்தில் ஜான்சி என்ற பகுதிக்கு உட்பட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர்தான் அர்ச்சனா. இவருக்கு வயது 30. இவரது கணவர் அரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 6 மாதமே என்பதால் வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்பதால் பணிக்கு வரும் போது தன்னுடனே குழந்தையை அழைத்து வந்து விடுகிறார் அர்ச்சனா.

தற்போது, அர்ச்சனா தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொண்டு வருவது போல ஒரு போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர்தான் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் அர்ச்சனாவின் சீனியர் ஆபீசர் ஆவார். அர்ச்சனாவின் இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் தனது கடமையை தவறாமல் செய்யும் அர்ச்சனாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close