Netizens impressed after injured langur visits hospital to get treated : மனிதர்கள் நாம் தான் நம் உடலுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவமனையை நோக்கி ஓடுகின்றோம். மிகவும் இக்கட்டான சூழலில் மட்டும் தான் விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. அதுவும் தாமாக முன்வந்து மனிதர்கள் விலங்குகளுக்கு சிகிச்சை செய்தால் மட்டும் தான்.
ஆனால் இந்த வீடியோவை பாருங்கள். இங்கு நடப்பதே விந்தை தான். கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது தந்தேலி. அங்கே அமைந்திருக்கும் பாட்டில் மருத்துவமனை முன்பு குரங்கு ஒன்று வெகுநேரமாக அமைதியாக இருந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர் குரங்கிற்கு என்ன தேவை என்று கவனித்துள்ளார். அடிபட்டிருக்கும் அந்த குரங்கிற்கு உதவி செய்த அவர் குரங்கின் காயத்தை சுத்தம் செய்து அதற்கு மருந்தினை தடவி வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் படிக்க : உயிரை காப்பாற்றிய யானை; 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த பீகார் நபர்
வனத்துறை அதிகாரி இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, காயம்பட்ட குரங்கு பாட்டீல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருக்கும் காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை ஊழியரின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் வாழ்த்தி வருகின்றனர். அதே சமயத்தில் பலரும் அந்த குரங்கின் அறிவு திறனை கண்டு வியந்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். மனிதர்களை போலவே காயம் என்றவுடன் உடனே மருத்துவமனைக்கு வரும் இந்த குரங்கின் அறிவை பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil