Advertisment

நிதீஷ் குமாரை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை விடுவாரா? நெட்டிசன்கள் காட்டம்

இந்தியா கூட்டணி கூட்டத்தில், ‘இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்’ என கூறிய நிதிஷ்குமாரைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுவாரா என்று நெட்டிசன்கள் காட்டமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
MK Stalin NItish

மு.க. ஸ்டாலின் - நிதீஷ் குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா கூட்டணி கூட்டத்தில், ‘இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்’ என கூறிய நிதிஷ்குமாரைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுவாரா என்று நெட்டிசன்கள் காட்டமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisment

பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அணியான இந்தியா கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே,  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசியபோது, தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால், கோபமடைந்த நிதீஷ் குமார்,  “​நாம் நமது நாட்டை இந்துஸ்தான் என்றும், இந்தி நமது தேசிய மொழி என்றும் அழைக்கிறோம். நமக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறி கொந்தளித்தார்.

மத்தியில் பா.ஜ.க அரசு இந்தி மொழி தொடர்பான திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிடும்போதெல்லாம், இந்தி திணிப்பு என்று தி.மு.க கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

அண்மையில்கூட, கோவா விமான நிலையத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை சி.ஐ.எஸ்.எஃப் வீரர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிரட்டும் விதமாகக் கூறியதற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமார்,  “இந்தி தேசிய மொழி, இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறியதற்கு அமைதியாக இருந்தது குறித்து, நெட்டிசன்கள் பலரும் காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றானர்.   

இன்னைக்கு ஸ்டாலின்

நிதிஷ்குமார் கண்டித்து போராட்டம் நடத்துவாரா?



இல்லை



அறிக்கையாவது விடுவாரா 😀 pic.twitter.com/0eMDCSJyBz— Kavi arasu Trichy (@Kavi20861314) December 20, 2023

இது குறித்து கவி அரசு திருச்சி (Kavi arasu Trichy) தனது எக்ஸ் பக்கத்தில், “இன்னைக்கு ஸ்டாலின் நிதிஷ்குமார் கண்டித்து போராட்டம் நடத்துவாரா? இல்லை அறிக்கையாவது விடுவாரா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

ஏர்போர்ட் செக்யூரிட்டி ஹிந்தி தெரியாதான்னு.. கேட்டா, தமிழ்நாடு அதிரும்ங்க! கனி மொழி கண்கலங்கிருவாங்க, நிதிஷ் குமார் கேட்டா..

டி ஆர் பாலு வாய மூடிட்டு ஒக்காந்து இருக்காருங்க! ஹிந்தி வேணாம் போடான்னு சொன்ன இவங்க! நிதீஷ் குமார் வேணாம் போயான்னு!! சொல்லுவாங்களா?

எல்லாமே நடிப்பூங்க! pic.twitter.com/VONMBRLYi0— Karu.Nagarajan (@KaruNagarajan) December 20, 2023

பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் எக்ஸ் பக்கத்தில், “ஏர்போர்ட் செக்யூரிட்டி ஹிந்தி தெரியாதான்னு.. கேட்டா, தமிழ்நாடு அதிரும்ங்க! கனி மொழி கண்கலங்கிருவாங்க, நிதிஷ் குமார் கேட்டா..

 டி ஆர் பாலு வாய மூடிட்டு ஒக்காந்து இருக்காருங்க! ஹிந்தி வேணாம் போடான்னு சொன்ன இவங்க!  நிதீஷ் குமார் வேணாம் போயான்னு!! சொல்லுவாங்களா?

எல்லாமே நடிப்பூங்க!” என்று சாடியுள்ளார்.

கழகக் காவலர் அண்ணன் நிதீஷ் குமார் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும். pic.twitter.com/oEatxOUxR4— Anbalagan (@anbu) December 20, 2023

சென்னை விமான நிலையத்தில், 2021-ம் ஆண்டு தி.மு.க கனிமொழியை சி.ஐ.எஸ்.எஃப் வீரர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியபோது, சினிமா பிரபலங்கள் பலரும், “இந்தி தெரியாது போடா’ என்ற டி சர்ட் அணிந்து புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, அன்பழகன் (Anbalagan), “கழகக் காவலர் அண்ணன் நிதீஷ் குமார் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு, நிதீஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்யக் கேட்டபோது,‘இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்’ என கூறிய நிதிஷ்குமாரைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுவாரா என்று நெட்டிசன்கள் காட்டமாக கேள்வி கேட்டு வருகின்றனர். நெட்டிசன்களின் காட்டமான பதிவுகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

 

 

 

 

ஸ்டாலினைக் கேள்வி கேட்டு பா.ஜ.க, அ.தி.மு.க ஆதரவு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் அதே நேரத்தில், நிதீஷ் குமார் இந்தியைத் திணிக்காதீர்கள் என்று தி.மு.க ஆதரவு நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment