Advertisment

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு: ரெய்டுக்கு அப்புறம் பேச்சு மாறமாட்டீங்களே? நெட்டிசன் கம்மெண்ட்ஸ்

அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்களின் கருத்துகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

author-image
WebDesk
New Update
dd

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு: சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்களின் கருத்துகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்,  பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க 2019-ம் ஆண்டு முதல் பா.ஜ.க-வின் தேசியக் கூட்டணியில் தொடர்ந்து வந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் @niranjan2428 தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பாஜகவுடன் கூட்டணியை முறித்த சிவசேனா கட்சியே கடைசியில் இரண்டாக முறிந்தது சமீபத்திய வரலாறு” என்று பதிவிட்டுள்ளார்.

“அ.தி.மு.க - பா.ஜ.க இடையே பிரச்னைகள் களையப்பட்டு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜீ.கே. வாசன் கூறியுள்ளார்.  

இது குறித்து Rama Suganthan (வாழப்பாடி இராம சுகந்தன்) @vazhapadi, “யாரிடம் ராஜ்ய சபா சீட் கேட்பது ? இல்லை என்றால் கச்சேரி சபாவில் தான் சீட் பிடிக்க வேண்டும்!” நகைச்சுவையாக கம்மெண்ட் செய்துள்ளார்.

டீ @teakkadai1 என்ற எக்ஸ் பக்கத்தில் “கொடநாடு கொலை வழக்கு, அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கு என தலைக்கு மேல் கத்தி தொங்கினாலும், ஒன்றிய அரசு நினைத்தால் கவர்னர் மூலம், ஒரே நிமிடத்தில் இவற்றிற்கு அனுமதி அளித்து விட முடியும் என்ற நிலையிலும், அதிமுகவினர் பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்திருப்பது அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதியே. 

ரம்மி விளையாடும் போது, வேண்டுமென்றே ஒரு கார்டை இறக்கி ஆழம் பார்ப்பார்கள். அதற்கு ஒப்பான செயல் தான் இது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பா.ஜ.க அதிமுக கூட்டணி இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கூறி வந்தனர். இதனால், அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் @SavukkuOffical தெரிவித்துள்ளார்.

Batlieboy @BatlieBoy என்ற எக்ஸ் பக்கத்தில், “சிறப்பு சித்தப்பு ..

எந்த அழுத்தம் வந்தாலும் இந்த விடயத்தில் உருதியாக இருங்கள்... பா.ஜ.க பயத்த காட்டிதான் 

திமுக 15% ஓட்ட இலவசமா அள்ளிட்டு போனானுங்க... இனி அது நடக்காது..” என்று ஜாலியாக கம்மெண்ட் செய்துள்ளார்.

எஸ்.கே @Periambed15 என்ற எக்ஸ் பக்கத்தில், “பேச்சு மாரமாட்டிங்களே இ.டி., சி.பி.ஐ, ரெய்டுக்கு அப்புறம்” என்று ஜாலியாக அ.தி.மு.க-வை நோக்கி கம்மெண்ட் செய்துள்ளார்.

 Monk @SKtwitz என்ற எக்ஸ் பக்கத்தில், “மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் ஆதரவு அளிப்பீங்க... உங்க மங்காத்தா வேலை என்ன தெரியாதா?” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.



BakBak @BakBak2122 என்ற எக்ஸ் பக்கத்தில், “வாழ்த்துக்கள், மிக மிக நல்ல முடிவு, இதை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளக் கூடாது. மதச்சார்பற்ற அமைதிப் பூங்காவான தமிழகத்தை பா.ஜ.க-வின் மதவெறி ஆட்டத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி, அதன் உறவு நாளடைவில் அ.தி.மு.க-வையும் அழித்துவிடும். நல்ல நேரம் கட்சியும் தப்பித்துக் கொண்டது.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியே வந்ததற்கு கொள்கை காரணம்னு சொல்றாங்களா பாருங்க என்று கேட்டு Dhivya Marunthiah @DhivCM என்ற எக்ஸ் பக்கத்தில் மீம்ஸ் போட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்களின் கருத்துகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment