New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/Baby-Birth.jpg)
குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சியில் அதனை உலகுக்கு தெரியப்படுத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு பெண்ணின் குழந்தை பிறப்பு அனுபவமும் தனித்துவமானது, ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும். பெரும்பாலும் குழந்தை பிறப்பு என்பது ஒரு பெண்ணின் உணர்வு ரீதியான வலிமைக்கும் உடல் திடத்திற்கும் பெரிய சோதனையாக அமைகிறது.
குழந்தை பிறப்பு வாழ்க்கையின் மிகவும் முக்கியமான தருணம். இந்தத் தருணத்தைத் தவிர்க்க யாருமே விரும்புவதில்லை. அந்த உன்னத தருணத்தில்தான் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுமை அடைவதாக, பரிபூரணம் அடைவதாக உணர்கிறார்கள்.
குழந்தை பிறந்ததும் பெற்றோர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. உறவினர்கள், அக்கம்பக்கதினர் சுற்றும் சூழ வருகை தந்து குழந்தையையும், தாயையும் பார்த்து செல்வர். ஆனால், தற்போதைய வேகமான வாழ்க்கையிலும், சமூக வலைத்தள செல்ஃபி வாழ்க்கையிலும், குழந்தை பிறந்ததும் முதலில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர். அதிலும், சிலர் பிரசவ அறையிலேயே புகைப்படம் எடுத்து அப்லோட் செய்து விடுகின்றனர்.
ஆனால், அவ்வாறு அவசர கதியில் புகைப்படம் எடுக்கும் போது, சுற்றியுள்ள விஷயங்களை பார்க்க மறந்தும் விடுவதுடன், அதனை அப்படியே சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர். அப்படி பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்றில், குழந்தையை பெற்ற தாய் பின்னணியில் என்ன நிலைமையில் உள்ளார் என்பதை கூட பார்க்காமல் பதிவிடப்பட்டுள்ளது. இதனை உன்னிப்பாக கவனித்த நெட்டிசன்கள், அதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். குழந்தை பெற்ற பின் படுத்திருக்கும் அந்த தாயை பொருட்படுத்தாமல் எடுக்கப்பட்ட வெறுக்கத்தக்க புகைப்படம் என சிலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிலர், அப்பெண்ணிற்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட வலி குறித்தும், இதேபோன்றதொரு அனுபவம் தங்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். வேறு சிலரோ, தங்களது கணவன் மற்றும் பாய் ஃபிரண்டை டேக் செய்து இதுபோன்று தங்களுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.