”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்

”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும், தெரிவித்தார்.

அப்போது, ”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார். அன்று முதல் இணையத்தில் ட்ரெண்டிங் இதுதான். பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி”, என்பதை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கொள்கை குறித்து கேட்டதற்கே ரஜினிக்கு தலை சுத்திவிட்டது எனக்கூறியதை அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

×Close
×Close