Advertisment

நீரஜ் சோப்ரா குறித்து கருத்து தெரிவித்த சாய்னா; ‘விளையாட்டில் கங்கனா ரணாவத்’- நெட்டிசன்கள் ட்ரோல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பற்றிய கருத்துக்காக, ‘கங்கனா ரணாவத் ஆஃப் ஸ்போர்ட்ஸ்” என்று சமூக வலைதளங்களில் சாய்னா நேவால் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Saina Nehwal

2021-ல் டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை ஈட்டி எறிதல் விளையாட்டு ஒலிம்பிக்கில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று சாய்னா நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு பாட்காஸ்ட் நேர்காணலின்போது தெரிவித்த கருத்து, சமூக ஊடகங்களில் விவாதத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. அந்த பாட்காஸ்ட் நேர்காணலின்போது, 2021-ல் டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை ஈட்டி எறிதல் விளையாட்டு ஒலிம்பிக்கில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று சாய்னா நேர்மையாக ஒப்புக்கொண்டார். சாய்னாவின் இந்த கருத்து, நேர்மையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் 'கங்கனா ரனாவத் ஆஃப் ஸ்போர்ட்ஸ்' என்று குறிப்பிட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

Advertisment

“நீரஜ் 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது, ​​தடகளத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இருப்பதை நான் அறிந்தேன்” என்று சாய்னா பாட்காஸ்ட் ஒன்றில் கூறினார். இந்த பேச்சு பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, சாய்னாவை சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகையாக இருந்து பா.ஜ.க-வில் இணைந்து எம்.பி-யாகி உள்ள கங்கனா ரணாவத்தை குறிப்பிட்டு, ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாய்னா நேவால், “வீட்டில் உட்கார்ந்துகொண்டு கருத்து சொல்வது மிகவும் எளிது, ஆனால், விளையாட்டில் விளையாடி நாட்டிற்காக பதக்கம் வெல்வது கடினமானது” என்று கூறினார்.

“பாராட்டுக்கு நன்றி.. கங்கனா அழகாக இருக்கிறார்... ஆனால், நான் எனது விளையாட்டில் முழுமையாக இருக்க வேண்டும், நான் பெருமையுடன் உலக நம்பர் 1 வீரராகவும், பேட்மிண்டனில் ஒலிம்பிக்கில் என் நாட்டிற்கு பதக்கத்தையும் பெற்றுத்தந்தேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டு கருத்து சொல்வது எளிது, ஆனால், நீரஜ் எங்கள் சூப்பர் ஸ்டார், அவர் அந்த விளையாட்டை இந்தியாவில் மிகவும் பிரபலமாக்கினார்” என்று சாய்னா நேவால் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதே போல, சாய்னா நேவால் இதற்கு முன்பு, ஜஸ்பிரித் பும்ரா குறித்த கருத்துக்கு ட்ரோல் செய்யப்பட்டார். கண்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, கிரிக்கெட் vs பேட்மிண்டன் என்று ஜஸ்பிரித் பும்ரா பதிவில் சாய்னாவை விமர்சித்தார்.



இதற்கு, “எந்த வகையில் நான் ஏன் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும்? நான் 8 வருடங்கள் விளையாடி இருந்தால் ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் அளித்திருப்பேன்” என்று நேவால் பதிலளித்தார்.

“ஜஸ்பிரித் பும்ரா என்னுடன் பேட்மிண்டன் விளையாடினால், என்னுடைய ஸ்மாஷை அவரால் எடுக்க முடியாமல் போகலாம். இந்த விஷயங்களுக்காக நம் நாட்டில் நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன் (முன்பு) ஒவ்வொரு விளையாட்டும் அதில் சிறந்தது. ஆனால், நான் சொல்ல விரும்புகிறேன், மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு கொடுங்கள், கிரிக்கெட், பாலிவுட் எப்போதும் எங்கள் கவனத்தை ஈர்க்கும்.” என்று சாய்னா நேவால் பதிலடி கொடுத்திருந்தார்.



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Saina Nehwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment