விலங்குகள் பெரும்பாலானவை பிறந்த உடனே நடக்கத் தொடங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டுமே பிறந்து நடப்பதற்கு சில மாதங்கள் ஆகிறது. மற்ற விலங்க்குகளைப் போல யானைகளும் பிறந்த உடன் நடக்க ஆரம்பிக்கின்றன.
நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரிய விலங்கு யானை, இந்த யானைகள் பொதுவாக வன விலங்குதான். ஆனால், மனிதர்கள் அதை வனங்களில் இருந்து பிடித்து வந்து வளர்க்கிறார்கள். காடுகளைப் பாதுகாப்பதும், காடுகளைப் பரப்புவதும் யானைகள்தான். யானைகள் சமூகமாக வாழும் ஒரு விலங்கு. யானைகள் மிகவும் நுண்ணுணர்வு மிக்கவை. மனிதர்களின் கர்ப்ப காலம் 10 மாதங்கள் என்றால், யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். புதியதாக பிறந்த ஒரு யானைக் கன்று 90-115 கிலோ எடை இருக்கும். யானைக் குட்டிகள் பார்க்கவே அழகாக சுட்டியாக குறும்புத்தனமாக இருக்கும்.
புதியதாகப் பிறந்த ஒரு யானைக் கன்று, தாய் யானையின் பின்னால், தத்தி தடுமாறி விழுந்து நடந்து செல்லும் க்யூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதியதாகப் பிறந்த ஒரு யானைக் கன்று, தாய் யானையின் பின்னால், தத்தி தடுமாறி நடந்து செல்லும் வீடியோவைப் பாருங்கள்:’
Just born and started walking. Not able to walk properly though, but one day he will walk and earth will shake. pic.twitter.com/3E7rvHnc07
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 22, 2024
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு புல்வெளிப் பகுதியில் ஒரு தாய் யானை நடந்து செல்கிறது. அதன் பின்னால், புதியதாகப் பிறந்த ஒரு குட்டி யானை தத்தித் தடுமாறி விழுந்து சுட்டியாக நடந்து செல்கிறது. இதன் மூலம், அந்த யானைக் குட்டி நடக்கப் பழகுகிறது என்பது தெரிகிறது. தாய் யானையின் பின்னால், குட்டி யானை தத்தித் தடுமாறி கீழே விழுந்து நடந்து செல்லும் க்யூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “இந்த யானைக் குட்டி இப்போதுதான் பிறந்து நடக்க ஆரம்பித்துள்ளது. அதனால், சரியாக நடக்க முடியாவிட்டாலும், அது ஒரு நாள் நடக்கும்போது பூமி அதிரும்.” என்று உணர்வுப் பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
தாய் யானை பின்னால், தத்தி தடுமாறி நடந்து செல்லும் யானைக் குட்டி மிகவும் அழகாக இருப்பதாகவும் இந்த வீடியோ மனதைக் கவரும் விதமாக இருப்பதகாவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.