விலங்குகளில் வேட்டையாடி உண்ணும் ஊண் உண்ணி விலங்குகள் ஒருபோதும் தாவர உண்ணிகளாக மாறாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கே ஒரு ஓநாய் பெர்ரி பழங்களைச் சாப்பிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்ற சொலவடையை பலரும் கேட்டிருப்பீர்கள். மேன்மக்கள், எந்த நிலையிலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று பொருள் சொல்லலாம். அதே நேரத்தில், வேட்டையாடும் உண்ணும் ஊண் உண்ணி விலங்குகள் ஒருபோதும் தாவர உண்ணியாக மாறாது என்பதும் பொருள்படும்.
ஆனால், ஒரு ஊண் உண்ணி விலங்கு திடீரென அரிதாக தாவர உணவுகளையும் சாப்பிடுகிறதென்றால், அது அதிசயம்தான். அந்த வகையில் வேட்டையாடும் விலங்கான ஓநாய் பெர்ரி பழங்களை சாப்பிடுகிற ஆச்சரிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வேட்டையாடி சாப்பிடும் ஊண் உண்ணியான ஓநாய் பெர்ரி பழங்களைச் சாப்பிடுகிற வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து சுதா ராமென் குறிப்பிடுகையில், “ஓநாய்கள் பெர்ரிகளை சாப்பிடுகின்றன என்ற கண்டுபிடிப்பு வனவிலங்கு அறிவியலில் மிகவும் சுவாரசியமாக இருந்தாலும், பெர்ரி செடிகள் என்னவாகும் என கவலை அளிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு இனத்தை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மீறி அதை நிர்வகிப்பதற்கான சவால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலி வேண்டுமானால் பசித்தால் புல்லைத் திண்ணாமல் போகலாம். ஆனால், ஓநாய் பசித்தால் பெர்ரி பழங்களை சாப்பிடும் என்று இந்த வீடியோப் பார்க்கும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"